`ஜீனியஸ்', `ஏஞ்சலினா', `சாம்பியன்' திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜா மற்றும் சசிகுமார் இணைந்து நடிக்கும் 'கென்னடி கிளப்' என்ற படத்தைத் தொடங்கி இருக்கிறார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்திற்கு பின்னர் இயக்குநர் சுசீந்திரன் தற்போது ஜீனியஸ், ஏஞ்சலினா, சாம்பியன் போன்ற படங்களை இயக்கு முடித்துள்ளரார். இதில் ஜீனியஸ் திரைப்படம் வரும் அக்டோபர் 26-ஆம் தேதி வெளியாகிறது. 


இந்நிலையில் தற்போது இயக்குனர் பாரதிராஜா நடிப்பில் “ கென்னடி கிளப்“ என்ற புதிய படத்தை இயக்க இயக்குனர் சுசீந்திரன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த திரைப்படத்தில் சூரி, முனீஸ்காந்த், மீனாட்சி, காயத்ரி, நீது, சௌமியா, ஸிம்ரிதி, சௌந்தர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பெண்கள் கபடியை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கின்றார். இதற்கு முன்னதாக பாண்டியநாடு, பாயும் புலி, மாவீரன் கிட்டு ஆகிய படங்களுக்கு சுசீந்திரன் - டி. இமான் கூட்டணி அமைந்தது குறிப்பிடத்தக்கது.


பழனியைக் கதைக்களமாக வைத்து உருவாகவுள்ள இத்திரைப்படம் வருகிற தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.