ஆண் பாடகரை பொது மேடையில் வைத்து கட்டிப் பிடித்ததற்காக சவுதி பெண் கைது செய்யப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சவுதியில் பெண்கள் பொது இடங்களில் ஆண்களுடன் இணைந்து இருப்பதற்கு அனுமதி இல்லை. இந்நிலையில் டாய்ப்பின் வெஸ்டர்ன் சிட்டியில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாடர் மஜித் அல்-மோஹன்டீஸ் பாடல் பாடிக்கொண்டு இருந்தார். அப்போது யாரும் எதிர்பார விதமாக இளம்பெண் ஒருவர் அவரை நோக்கி ஓடிவந்து அவரை கட்டிப்பிடித்துக் கொண்டார். இதனையடத்து கூடியிருந்த பொதுமக்களிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டது.



உடனடியாக மேடைக்கு சென்ற காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்ட இளம்பெண்ணை கைது செய்தனர். பின்னர் அல்-டய்ப்பி பவுன்டேஷன் பெண்கள் பாதுகாப்பு நிலையத்தில் வைத்து இளம்பெண் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார். இவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஈரானில் பிறந்து சவுதியில் வசித்து வரும் பாடகர் அல்-மோஹன்டீஸ், இச்சம்பவத்திற்கு பின்னர் மீண்டும் தனது இசை நிகழ்ச்சியினை தொடர்ந்து நடத்தியுள்ளார்.


இந்த சம்பவத்தின் வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது!