Viral Video: முதலையிடம் சிக்கிய யானையின் தும்பிக்கை; மனம் பதற வைக்கும் காட்சிகள்

பொதுவாக இணைய தளத்தில், காட்டு விலங்குகள் தொடர்பான காணொளிகள் பதிவிடப்பட்ட உடனேயே சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது.
பொதுவாக இணைய தளத்தில், காட்டு விலங்குகள் தொடர்பான காணொளிகள் பதிவிடப்பட்ட உடனேயே சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது.
இணைய தளத்தில் பகிரப்படும் வீடியோக்களில், சில நேரங்களில் இரண்டு விலங்குகள் பரஸ்பரம் அன்பைப் பொழிவதைக் காணலாம். சில சமயங்களில் பரஸ்பரம் உக்கிரமாக சண்டையிடுவதைக் காணலாம். அந்த வகையில் முதலையிடம் சிக்கிய யானை தொடர்பான வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
முதலைகள் நீரிலும் நிலத்திலும் கடுமையாக தாக்கும் திறன் பெற்றவை. வாய்ப்பு கிடைத்தவுடன் எந்த மிருகத்தையும் வெற்றிகரமாக தாக்கி இரையாக்கி விடும். அதன் பிடியில் இருந்து தப்புவது மிகவும் கடினம்.
தற்போது வைரலாகி வரும் வீடியோவில், முதலையிடம் யானை ஒன்று சிக்கிக் கொண்டு தவிப்பப்பது நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது. அதில் யானையின் தும்பிக்கையை தனது வாயால் கவ்விக் முதலை கொண்ட காட்சி மனதை பதற வைக்கும். இந்த காணொளி சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், யானைகள் கூட்டம் தாகம் தீர்க்க வனப்பகுதியில் அமைந்துள்ள குளம் அருகே வருவதை காண முடிகிறது. அனைத்து யானைகளும் சேர்ந்து தண்ணீர் குடிக்க ஆரம்பித்தன. ஆனால் இங்கு முதலை ஒன்று பதுங்கி அமர்ந்து வாய்ப்பு கிடைத்தவுடன் யானையின் தும்பிக்கையை பிடித்தது. யானை தும்பிக்கையில் சிக்கியிருந்த முதலையை விடுவிக்க தும்பிக்கையை அங்கும் இங்கும் சுழற்றுவதைக் காணலாம்.
மற்ற யானைகளும் முதலையின் இந்தச் செயலால் கோபமடைந்து, முதலையை தாக்குவதைக் காணலாம். யானைகளின் ஒற்றுமையைப் பார்க்கும்போது முதலையிடம் இருந்து யானையின் தும்பிக்கையை விடுவிப்பதில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
வீடியோவை இங்கே காணலாம்:
இந்த வீடியோ Wildlife_stories_ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான பார்வைகளையும் விருப்பங்களையும் பெற்றுள்ளது.
மேலும் படிக்க | நாகப்பாம்பை உயிருடன் விழுங்கும் ராட்சஸ பாம்பு; மனதை உலுக்கும் வைரல் வீடியோ..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR