பதைபதைக்கும் நிமிடங்கள்! கடலுக்குள் பெண்ணை கவ்வியிழுத்த கடல் சிங்கம்!
கடல் சிங்கம் ஒன்று பெண்ணை பின்புறமாக வந்து கடலுக்குள் இழுத்து சென்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இணையம் பலவிதமான அற்புத நிகழ்வுகளால் ஆக்கிரமித்துள்ளது. அன்றாடம் வியக்கதக்க பல நிகழ்வுகள் இணையத்தில் பதிவேற்றபட்டு நெட்டிசன்களை கவர்ந்து வைரலாகி விடுகிறது. கடல்வாழ் உயிரினங்களின் சில அரிய செயல்கள் விரைவில் கவன ஈர்ப்பை பெற்றுவிடுகிறது. அந்தவகையில் தற்போது கடல் சிங்கம் நொடிப்பொழுதில் செய்த செயல் ஒன்று பார்ப்பவர்கள் நெஞ்சை உறையச்செய்துள்ளது.
மேலும் படிக்க | ஒரு கையில் சிகெரெட்.. மறு கையில் பாம்பு; ரஜினி ஸ்டைலில் பாம்பை பிடிக்கும் பெண்.. !!
கடல் சிங்கங்கள் பொதுவாக நான்கு கால்களில் நடக்கும் திறன் கொண்டவை. இவை குட்டையான, அடர்த்தியான முடிகள், பெரிய மார்பு மற்றும் வயிறை கொண்டுள்ளது. இந்த கடல் சிங்கங்கள் அழியும் நிலையில் உள்ளதாக ஆய்வுகள் கூறப்படுகிறது. தற்போதுள்ள இந்த வைரல் வீடியோவானது டுவிட்டரில் விஷியஸ் வீடியோ என்கிற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், வெள்ளை நிற உடையணிந்த பெண் ஒருவர் கடலின் அருகேயுள்ள இருக்கையில் அமர முற்படுகிறார். அப்போது அவர் பின்னாலிருந்து வேகமாக வந்த கடல் சிங்கம் நொடிப்பொழுதில் அந்த பெண்ணை கவ்வியிழுத்து கடலுக்குள் சென்றுவிடுகிறது. பின்னர் அருகிலிருந்த ஒருவர் கடலுக்குள் குதித்து அந்த பெண்ணை மீட்டெடுக்க முயல்கிறார்.
மார்ச்-17ம் தேதி டுவிட்டரில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இதனை பார்த்த பலரும் சிரிப்பு எமோஜிகளையும், கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தை பற்றியும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க | திருமணத்தில் தோழிகள் செய்த வேலையால் தேம்பித் தேம்பி அழுத மணப்பெண்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR