அகமதாபாத்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பரேஷ் தனனி, அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விச பாம்பினை வெறும் கையால் பிடித்து இணைய ரசிகர்களுக்கு தீனி போட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத்தின் காந்தி நகர் பகுதியில் இருக்கும் அரசு அலுவலகத்திற்குள் நுழைந்த விசப்பாம்பினை காங்கிரஸ் கட்சி மூத்த உறுப்பினர் பரேஷ், வெறும் கையால் பிடித்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.


குஜராத் சட்டமன்றத்தின் எதிர்கட்சி தலைவரான இவர், விஷப்பாம்பின் வாலை பிடித்து அதனை அப்புறப்படுத்திய காட்சிகளினை அவரது உதவியாளர்கள் முகப்புத்தகம் மற்றும் ட்விட்டரில் பதிவேற்றியுள்ளனர். இந்த வீடியோவானது தற்போது பல லைக்ஸ்களை தட்டி வருகின்றது. இந்த வீடியோவானது அவரது உதவியாளர்களால் பிடிக்கப்பட்டது என தெரிகிறது.


இந்த வீடியோவினை பதிவேற்றம் செய்துள்ள அவர், இந்த வீடியோ பதிவினை குறித்து குஜராத்தி மொழியில் பதிவிட்டுள்ளதாவது... "வழிமாறி வந்த விஷப் பாம்பினை எப்படி பிடிப்பது என்று எனக்கும் தெரியும்" என குறிப்பிட்டுள்ளார்.



பிடிப்பட்ட பாம்பினை பின்னர் அருகில் இருக்கும் வனப்பகுதியில் விட்டதாக காங்கிரஸ் கட்சியின் ஊடக ஒருங்கினைப்பாளர் ஹரேஷ் சிஸ்சார் தெரிவித்துள்ளார்.