2023 ஆம் ஆண்டு வெகு கொண்டாட்டமாக தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் மக்கள் ஆடல் பாடல் என புத்தாண்டை அமோகமாக வரவேற்றனர். இரவு பார்டிகள், கிளப் ஆட்டம் என வீதிகள் எங்கும் கொண்டாட்டம் களைகட்டியது. நியூசிலாந்தில் தொடங்கிய புத்தாண்டு கொண்டாட்டம் படிப்படியாக ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், இந்தியா என ஒவ்வொரு நாடாக கடந்து சென்றது. அமெரிக்காவின் டைம்ஸ் கோபுரம் முன்பு ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆட்டம் போட்டு புத்தாண்டை வரவேற்றனர். இதுதொடர்பான கண்கவர் வாணவேடிக்கைகள், நடன வீடியோ இணைய பகுதியெங்கும் நிரம்பியிருக்கும் நிலையில், ஒரு வீடியோ பெரும்பாலான நெட்டிசன்களை இதயப்பூர்மாக தொட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Viral Video: ஹூஹூம்.... இது தேர்ற கேஸ் இல்லை... குட்டியானையின் க்யூட் வீடியோ!


புத்தாண்டு அன்றுகூட தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர், அவர் சென்ற இடத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தயாராக இருந்த இடத்தில் குத்தாட்டம் போடத் தொடங்கினார். தன்னை மறந்து ஆட்டத்தில் கவனம் செலுத்திய அவரை அங்கிருந்தவர்கள் அனைவரும் வேடிக்கை பார்த்தனர். யார் வேடிக்கை பார்க்கிறார்கள்? என்றெல்லாம் அவர் கொஞ்சம் கூட பொருட்படுத்தவில்லை. தனக்கு கிடைத்த நேரத்தில் புத்தாண்டை மகிழ்ச்சியாக வரவேற்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆட்டம் ஆடுகிறார்.



சில நிமிடங்கள் அவர் ஆடும் நேரத்தில் அவர் வந்திருந்த குப்பை வண்டி கிளம்பிவிடுகிறது. ஆடிக் கொண்டிருந்தாலும், வண்டி கிளம்புவதை பார்த்த அவர், ஆட்டத்தை அப்படியே விட்டுவிட்டு தன்னுடைய குப்பை அள்ளும் கடமையை செய்ய ஓடிவிடுகிறார். இந்த வீடியோ நெட்டிசன்களை வெகுவாக ஈர்த்துள்ளது. வீடியோவை பகிர்ந்த நெட்டிசன், "நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்க விரும்பினால், வாழ்க்கை உங்களுக்கு வாய்ப்பளிக்கும் போதெல்லாம் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்ற கேப்சனுடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. 


மேலும் படிக்க | Viral Video: 360 அடி உயர விக்டோரியா நீர்வீழ்ச்சியின் விளிம்பில் தொங்கும் பெண்! பகீர் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ