இந்தியா, பாகிஸ்தான் அணியுடன் விளையாடக் கூடாது என்ற கவுதம் கம்பீர் கருத்துக்கு, ''படித்த யாராவது இப்படி பேசுவார்களா'' என பாகிஸ்தான் வீரர் அப்ரிதி கேள்வி எழுப்பியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிழக்கு டெல்லி மக்களவை உறுப்பினருமான கவுதம் கம்பீர் முன்னதாக புல்வாமா தாக்குதலையும், உலகக் கோப்பை இந்தியா பாகிஸ்தான் போட்டியையும் இணைத்து கருத்து தெரிவித்திருந்தார். கம்பீரின் இந்த கருத்து "முட்டாள் தனமானது" என்று அப்ரிதி தெரிவித்துளார். 


ICC உலகக்கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணியுடன் விளையாட கூடாது, ஏன் இறுதிப் போட்டியில் விளையாடும் நிலைமை ஏற்பட்டால் கூட விளையாடக்கூடாது. இதனால் இந்தியாவிற்கு சில புள்ளிகள் இழப்பு ஏற்பட்டால் கூட விளையாடக்கூடாது. நம் வீரர்கள் உயிர் தியாகம் செய்ததை நினைக்க வேண்டும் என்று முன்னதாக கம்பீர் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


எனினும் வரும் உலக கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணியை மான்செஸ்டரில் ஜூன் 16-ஆம் தேதி சந்திக்கிறது. 


இந்நிலையில் தற்போது கவுதம் கம்பீரின் இந்த பரிந்துரைக்கு அப்ரிதி கடும் அதிருப்பி தெரிவித்துள்ளார். ''கம்பீர் சொல்வது அர்த்தமற்றது. படித்த யாராவது இப்படி கூறுவார்களா" என அவர் மறு கேள்வி எழுப்பியுள்ளார்.



அப்ரிதி சமீபத்தில் தன்னுடைய சுயசரிதை புத்தகத்தில் கம்பீரை அணுமுறையற்ற வீரர் என்று விமர்சித்திருந்தார். 



அதற்கு பதிலளித்த கம்பீரும் "இந்தியா மெடிக்கல் டூரிஸத்தை ஊக்குவிக்கிறது அப்ரிதியை நல்ல மனநல மருத்துவரிடம் காட்டுகிறேன். இந்தியா வர சொல்லுங்கள்" என்று கூறியிருந்தார். இருவருக்கும் இடையில் ஒரு பணிப்போர் நிலவி வரும் இத்தருணத்தில் தற்போது மிண்டும் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.