Shocking Accident on live: ஸ்டுடியோவில் பத்திரிகையாளர் மீது உள்ளரங்கு இடிந்து விழுந்தது!
ஈஎஸ்பிஎன் கொலம்பியா பத்திரிகையாளர் கார்லோஸ் ஓர்டுஸ் அதிர்ஷ்டசாலி, அவருக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
கொலம்பியாவில் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர் நேரலையில் இருந்தபோது ஸ்டுடியோ செட்டின் ஒரு பகுதி அவர் மீது விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. ஈஎஸ்பிஎன் கொலம்பியா பத்திரிகையாளர் கார்லோஸ் ஓர்டுஸ் அதிர்ஷ்டசாலி, அவருக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
இந்த விபத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது, ஏற்கனவே ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இந்த வீடியோவை பார்த்துவிட்டனர்.
நேரடி நிகழ்ச்சியின் போது விளையாட்டு ஆய்வாளர் நாற்காலியில் அமர்ந்திருப்பதை அந்த வீடியோவில் காண முடிகிறது. அப்போது, ஸ்டூடியோவின் செட் ஒன்று நொறுங்கி அவர் திடீரென அவரது முதுகில் விழுகிறது. அவர் அப்படியே மேசையில் விழுந்தார். உடனே, கேமரா மேன் ஷாட்டை துண்டித்துவிட்டார்.
Also Read | சேலையை இப்படியும் விளம்பரப்படுத்த முடியுமா? Super Idea
நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அதிர்ச்சியடைந்தார், ஆனால் நேரடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்ததால் ஒன்றும் செய்யமுடியாமல் திகைத்துப் போனார். ஆனால் நொடியில் சுதாரித்துக் கொண்டு, விளம்பர இடைவேளையை அறிவித்துவிட்டார். இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு, பலரால் பார்க்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பிறகு வெளியிடப்பட்ட அறிவிப்பில் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும், மூக்கில் காயமும், சிறிய சிராய்ப்புகளுமே ஏற்பட்டதாகவும், மற்றபடி அவர் நன்றாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"நேற்றிரவு நடந்த விபத்து குறித்து தெரிந்ததும், நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்று தெரியவந்தது. மூக்கில் மட்டும் சிறுகாயம் (எலும்பு முறிவு இல்லை) ஏற்பட்டுள்ளது. அது தவிர, லேசான சிராய்ப்புடன் தப்பித்துக் கொண்டேன். இதற்கு கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி” என்று கார்லோஸ் ஓர்டுஸ் ஸ்பானிஷ் மொழியில் டிவிட்டர் செய்தி வெளியிட்டுள்ளார்.
Also Read | COVID-19 Marriages: கொரோனாவால் ஒரு கோடி குழந்தை திருமணம் நடக்கலாம் UNICEF கவலை
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR