மாப்பிள்ளையை விலை கொடுத்து வாங்கும் வியாபாரமா கல்யாணம்? என்ற கேள்வி பலருக்கும் மனதில் எழுகிறது. பொதுவாக இந்தியத் திருமணங்களில் வரதட்சணை பொதுவான விஷயம். வரதட்சணை கேட்பது அல்லது கொடுப்பது குற்றம் என்று தெரிந்திருந்தும், திருமணங்களில் வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் இயல்பானதாக உள்ளது. இன்றும்கூட, வரதட்சணையின் அடிப்படையில் தான் திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன என்பது வேதனைக்குரிய உண்மை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சில குடும்பங்களில் வரதட்சணைக்காக பெண்ணின் குடும்பத்தினர் மீது அழுத்தம் கொடுக்கப்படுகிறது. திருமணத்தில் வரதட்சணை கொடுப்பது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருமணத்திற்கு, ஒரு கோடி ரொக்கம், 1.25 கிலோ தங்கம் மற்றும் பல விலையுயர்ந்த கார்கள் சீதனமாக கொடுக்கப்படுகிறது.


வரதட்சணையாக கொடுத்தப் பொருட்களின் அளவு மிகவும் அதிகம் என்பதால், இதை அறிவிப்பவர் தனது கையில் ஒரு லிஸ்ட் வைத்திருக்கிறார். இந்த வரதட்ச்ணை வீடியோ, சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டதுமே வைரலாக பரவியது.


சீராக கொடுக்கப்படும் பொருட்கள் என்று சொல்லும் இந்த வீடியோ மிகவும் கவலைகளை ஏற்படுத்துகிறது. பரிசு கொடுத்தால் யாராவது கவலைப்படுவார்களா என்ற கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது.



கோடிக்கணக்கில் வரதட்சணை
சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், திருமணத்திற்கு எவ்வளவு வரதட்சணை கொகுக்கப்படுகிறது என ஒருவர் கூறுவதை காணலாம். இதை வரதட்சணை என்று சொல்லாமல், பரிசு என்று சொல்கின்றனர்.


மேலும் படிக்க | அடேங்கப்பா.. கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?


“டைனிங் செட் இருக்கு சார். இரண்டு கார்களும் கன்னிகாதானத்தில் கொடுக்கப்படுது.... முதல் கார், Mercedes-Benz E-Class E 200 மற்றும் இரண்டாவது Toyota Fortuner. இதைத் தவிர, 1.25 கிலோ தங்கம் மற்றும் 7 கிலோ வெள்ளி உள்ளது என்று சொல்கிறார். பிறகு, ஒரு கோடியே ஆயிரத்து ஐம்பத்தொரு ரூபாய் என்கிறார். 21 லட்சத்து 1 ஆயிரத்து 151 ரூபாய் திருமணப் பரிசு” என்ற அறிவிப்பும் வருகிறது. இதைக் கேட்டதும் திருமணத்திற்கு வந்தவர்கள், 'அருமை, அருமை' என்று சொல்கின்றனர்.


இன்ஸ்டாகிராமில் வீடியோ 
வைரலாகும் வீடியோ vinitbhatii என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது முதலில் @GANESHV81214930 என்ற X கைப்பிடியில் பகிரப்பட்டது. இந்த கல்யாண வீடியோ லட்சக்கணக்கான லைக்குகளையும், கோடிக்கணக்கான பார்வைகளையும் பெற்றுள்ளது.


இந்த வீடியோவிற்கு பயனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சுமார் 37 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.


(பொறுப்புத் துறப்பு: இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையில் குறிப்பிடபபட்டுள்ள விவரங்களுக்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது)


மேலும் படிக்க | Rio Raj: மனைவிக்காக ஸ்பெஷல் போட்டோக்களை பதிவிட்ட ரியோ! வைரலாகும் புகைப்படங்கள்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ