இந்தியாவின் சத்தீஸ்கர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் சில மாணவிகள் பீர் குடிக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. வைரலான இந்த வீடியோவில் பள்ளி சிறுமிகள் கூட்டாக சேர்ந்து பீர் குடிப்பது போல்  காட்சி இடம் பெற்றுள்ளது.. இந்த வீடியோ கடந்த ஜூலை 29 அன்று மஸ்தூரி பகுதியில் உள்ள பட்சௌரா கிராமத்தில் அமைந்துள்ள  அரசு பள்ளியில் எடுக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக உடனடி விசாரணையை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க |  கதவை தட்டி கிலிகாட்டிய பாம்பு: வீடியோ எடுத்தவனை சும்மா விடுமா? வைரல் வீடியோ


அப்பகுதியில் உள்ள பள்ளிகளின் பொறுப்பாளர் திரு.டி.ஆர்.சாஹு கூறுகையில்,  மாணவிகள் பள்ளியில் இருக்கும் போது பீர் மற்றும் குளிர்பானம் அருந்துவது வீடியோவில் தெரிகிறது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்ப்பதற்கு மிகவும் வருத்தமாக உள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் ஆசிரியர்களையும், அதிகாரிகளையும் விமர்சித்து வருகின்றனர். தற்போது பள்ளியில் என்ன நடந்தது என்று விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை, வைரலான வீடியோவில் இருந்த ஒரு மாணவியரிடம் ஆசிரியர்கள் விசாரணை நடத்தினர்.  



அப்போது அந்த மாணவி, தாங்கள்  விளையாட்டாக பீர் பாட்டில்களை குடிப்பது போல் நடித்ததாகவும், பள்ளியில் மது அருந்தவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர். இது போன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள்மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும் சம்பந்தப்பட்ட சிறுமிகளின் பெற்றோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று சாஹு தெரிவித்துள்ளார். 


இந்த பள்ளியில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் ஜூலை 29ஆம் தேதி ஒரு மாணவிக்கு  சகமானவிகள் வகுப்பறையில் பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர்.  அப்போது சில மாணவிகள் பீர் குடித்துள்ளனர், இதனை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அது தற்போது இணையம் முழுக்க வைரலாகியுள்ளது.  தற்போது வரை இந்த மாணவிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


மேலும் படிக்க | ராமேஸ்வரம் கஃபே வழக்கு குற்றப்பத்திரிகையில் திடுக்கிடும் தகவல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ