வைரல் வீடியோ:சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்துவிட்ட இந்தக் காலத்தில், இணையத்தில் இணைந்து நாம் பல்வேறு விஷயங்களை பற்றி தெரிந்துகொள்கிறோம். இணையம் மூலம் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை கொடுத்தால், அவற்றில் பயனுள்ள பல தகவல்களுடன் சேர்த்து, தேவையில்லாத சங்கடங்களும் வருவதை தவிர்க்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் உண்மையிலேயே உதவுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், பொழுதுபோக்குக்கு மட்டுமல்ல, நாம் என்றுமே நேரில் சென்று பார்க்க முடியாத அல்லது பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காத வீடியோக்கள் இணையத்தில் அதிகம் வைரலாகின்றன. அந்த வகையில், சமூக ஊடகஙக்ளில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத விஷயங்கள் ஆச்சரியமூட்டுகின்றன.


வனவிலங்குகள் தொடர்பான பல அதிர்ச்சி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளிவருகின்றன. இவற்றில் விலங்குகளுக்குள் நடக்கும் சண்டைகள், பாச பரிமாற்றங்கள் என இவை அனைத்தையும் பார்க்க முடிகிறது.


மேலும் படிக்க | ஓனம் ஸ்பெஷல்: கோழிக்கறி சர்ச்சையில் சிக்கிய போலீஸ் போட்ட ஓனம் டான்ஸ்


பயங்கரமாக வேட்டையாடும் விலங்கையும் பார்க்க முடிகிறது. புத்திசாலித்தனத்தால், ஒரு நொடியில் எஸ்கேப் ஆகும் விலங்குகளின் விவேகத்தையும் பார்க்க முடிகிறது. ஆனால் சில வீடியோக்களை பார்த்தால் நமக்கு பீதி ஏற்படுவதையும் தவிர்க்க முடிகிறது.


அப்படிப்பட்ட ஒரு த்ரில்லிங் வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. ஒரு முதலையின் வாய்க்குள் சென்ற ஆமை ஒன்று தப்பித்து வெளியே வந்த வீடியோ அனைவராலும் பாராட்டப்படுகிறது.


---


உண்மையில், அவ்வளவு  பெரிய முதலையின் வாய்க்குள் சென்ற பிறகு, ஒரு குட்டி ஆமை உயிருடன் பிழைத்து வரும் என்று யாராவது சொன்னால் அதை நம்ப மாட்டோம். ஆனால், இந்த வைரல் வீடியோவை பார்த்தால் நிச்சயமாக நம் கண்களையே நம்மால் நம்ப முடியாது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


முதலையின் வாய்க்குள் சிக்கிய ஆமை


வைரல் வீடியோ தொடங்கும்போதே, முதலையின் வாய், அசைபோட்டுக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. க்ளோசப்பில் சென்றால், முதலையின் பற்களுக்கு இடையில், ஒரு ஆமை அரைபட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். இது பீதியை கிளப்பினாலும், ஒரு கட்டத்தில் ஆமை வெளியில் குதித்து விடுவது ஆச்சரியத்தை மட்டுமல்ல, ஆறுதலையும் அளிக்கிறது.  


மேலும் படிக்க | தொண்டையில் கை விட்ட நபர்... நறுக்குனு கடித்த முதலை - வீடியோவ பார்த்தா பயந்துருவீங்க


முதலையிடன் பற்களில் கடிபடாமல் தப்பித்த ஆமை, தனது வேகத்திலேயே முதலையிடன் இருந்து நகர்ந்து மெதுவாக செல்கிறது. ஆனால், சோம்பேறி முதலை, அசையாமல் படுத்துக் கொண்டிருக்கிறது ஆச்சரியத்தையும் திகைப்பையும் அளிக்கிறது. இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இப்படியும் ஒரு சோம்பேறி இருப்பார்களா என்பது தான்


திகிலூட்டும் வீடியோ ஆச்சரியம் அளிப்பதாக மாறிய தருணம்


இப்படியொரு சோம்பேறித்தனமா? வாய்க்குள்ள இருந்த உணவை கோட்டை விட்டால் எப்படி பொழைப்ப? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், இது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கவும் அந்த முதலைக்கு சோம்பலாக இருக்கும் என்றால் என்ன செய்யலாம்?


இந்த  வீடியோ சமூக ஊடக தளமான எக்ஸ்-இல் பகிரப்பட்டு வைரலாகிறது.  இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இனையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். சிலர் தப்பித்த ஆமையின் சாமர்த்தியத்தைப் பாராட்டினால், பலர் பலம் வாய்ந்ததாக இருந்தாலும், சோம்பேறித்தனமாக இருக்கும் முதலையை பார்த்து, ‘இப்படி ஏமாளியா இருந்தா எப்படி பொழைப்பே?’ என்று கேள்விகளையும் எழுப்புகின்றனர்.


மேலும் படிக்க | உன்னை பிடிக்காம விடமாட்டேன்! கங்கணம் கட்டிக் கொண்டு துரத்தும் பென்குயின்! பல்பு கொடுக்கும் பறவை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ