புதுடெல்லி: கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுதும் தீவிரமாக பரவிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில், ஆக்சிஜன் சிலிண்டர்கள், படுக்கைகள் உட்பட பல மருத்துவ வசதிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலைநகர் டெல்லியில் (Delhi) சொல்ல முடியாத அளவு நிலைமை தீவிரமாக உள்ளது. டெல்லி இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையில், கொரோனா தொற்றின் காரணமாக இறந்த ஒருவரின் குடும்ப உருப்பினர்கள் இன்று கடும் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவை சேதப்படுத்தியதோடு, மருத்துவ பணியாளர்களையும் காயப்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


“நோயாளிக்கு அவசர சிகிச்சை பிரிவில் ஆக்ஸிஜன் (Oxgen) மற்றும் முதலுதவி அளிக்கப்பட்டது. அப்பல்லோவில் ஐ.சி.யூ படுக்கைகள் இல்லாததாலும், அவரது உடல்நிலை மோசமாகிக்கொண்டிருந்ததாலும், அவரை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் குடும்பத்தினரிடம் கோரிக்கை விடுத்தனர்” என்று மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.


60 வயதான பெண் நேற்று இரவு மருத்துவமனை அவசரநிலை பிரிவுக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவு (ICU) வசதியுடனான படுக்கை தேவைப்பட்டது. இருப்பினும், மருத்துவமனையில் ஐ.சி.யூ படுக்கைகள் எதுவும் காலியாக இல்லை. 


இந்த சம்பவம் குறித்து பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றன. 




ALSO READ: உச்ச நீதிமன்ற வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க அனுமதி அளித்தார் தலைமை நீதிபதி


காலை 8 மணியளவில் நோயாளி இறந்தார். அதன் பின்னர் அவரது குடும்பத்தினரும் சில உள்ளூர் ரவுடிகளும் சேர்ந்து அவசர சிகிச்சை பிரிவை சேதப்படுத்தத் தொடங்கினர்.


உயிர் இழந்த நோயாளியின் உறவினர்கள் அரங்கேற்றிய வன்முறையில் மருத்துவமனையில் (Hospital) மருத்துவர்களும் செவிலியர்களும் படுகாயம் அடைந்தனர். அவர்களை தடுத்து நிறுத்த மருத்துவமன நிர்வாகமும் அவர்களைத் திருப்பித் தாக்கியதாகக் கூறப்படுகின்றது. 


இதற்கிடையில், தேசிய தலைநகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கலில் ஏற்படும் குளறுபடிகள் தொடர்பான விஷயத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ள டெல்லி உயர்நீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கு, ஒரு பெரிய ஆக்ஸிஜன் சிலிண்டர் ரீ-ஃபில்லிங் பிரிவை கையகப்படுத்த உத்தரவிட்டது.


தேசிய தலைநகரில் உள்ள ஒரு பெரிய ஆக்ஸிஜன் சிலிண்டர் நிரப்பும் நிறுவனமான சேத் ஏர், ஆக்ஸிஜனை வழங்கவில்லை என்று மகாராஜா அக்ராசென் மருத்துவமனை மற்றும் மகா துர்கா அறக்கட்டளை மருத்துவமனை உட்பட பல மருத்துவமனைகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்ததை அடுத்து நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வந்தது.


ALSO READ: ஆக்ஸிஜன் ஆலையை எடுத்து நடத்துங்கள், உயிர்கள் முக்கியம்: டெல்லி HC அரசுக்கு அதிரடி உத்தரவு


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR