காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா மைசூரு விமான நிலையத்தில் தனது சக உதவியாளரை கன்னத்தில் அறைந்ததால் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா, தனது உதவியாளர் ஒருவரின் கன்னத்தில் அறையும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. சமீபகாலத்தில் சர்ச்சைகளின் அரசனாக மாறியிருப்பவர் முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா. ஒராண்டாக நீடித்து வந்த மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, மீண்டும் பாஜக அரியணை ஏறிய நிலையில், இரு கட்சிகளையும் சேர்ந்த தலைவர்கள் ஒருவரை ஒருவர் குற்றம்சுமத்தி பேசி வருகின்றனர்.


இந்நிலையில் இன்று மைசூரு விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துவிட்டு நகர முயன்ற சித்தராமையா அவரின் சக உதவியாளர் ஒருவரின் கன்னத்தில் திடீரென அறைந்தார். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. எனினும் இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



இதனிடையே நெருக்கடியான காலகட்டங்களில் கூட்டணி ஆட்சிக்கு வந்த இடையூறுகளை ஆபத்பாந்தவனாக காத்த முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது காங்கிரஸ் தொண்டர்களை துவண்டுபோக செய்துள்ளது.