ட்விட்டரில் ட்ரண்ட் ஆகும் விக்ரம்-ன் `ஸ்கெட்ச்`!
விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் - தமன்னா இணைந்து நடிக்கும் `ஸ்கெட்ச்` திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், அப்படத்தினை குறித்த தேடல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது!
விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் - தமன்னா இணைந்து நடிக்கும் "ஸ்கெட்ச்" திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், அப்படத்தினை குறித்த தேடல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது!
வடசென்னையை மையமாக கொண்டு கதை களம் அமைக்கப்பட்டு விக்ரம் நடிப்பில் வெளிவரும் திரைப்படம் ஸ்கெட்ச். ஆக்ஷன் கலந்த ஸ்டைலிஷ் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா ஆகியோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தினை கலைப்புலி எஸ். தாணு-வின் வி_கிரியேசன்ஸ் மற்றும் மூவிங் பிரேம் இணைந்து தயாரிக்கின்றனர். எஸ்.எஸ்.தமன் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.
முன்னதாக இத்திரைப்படத்தின் டீஸர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பெரும் எதிர்பார்புகளுக்கு இடையில் நாளை இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படம் ட்விட்டரில் ட்ரண்ட் ஆகி வருகின்றது