முன்னால் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு, பிரியங்கா காந்தி வதோரா அவமரியாதை செய்துவிட்டதாக மத்திய அமைச்சர் ஸ்மிரித்தி இராணி குற்றம்சாட்டியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி சிலைக்கு தன் கழுத்தில் அணிந்திருந்த மாலையை அணிவித்தார். 


தான் அணிந்திருந்த மாலையை எடுத்து முன்னால் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு அணிவித்து அவமரியாதை ஏற்படுத்திவிட்டதாக மத்திய அமைச்சர் ஸ்மிரித்தி இராணி உள்பட பாஜக தலைவர்கள் பலரும் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளனர்.


இதுகுறித்து மத்திய அமைச்சர் ஸ்மிரித்தி இராணி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது...



"ஏற்கனவே தனது கழுத்தில் போடப்பட்ட மாலையை எடுத்து, அதுவும் இடது கையால் தொண்டர்களின் பலத்த கைத்தட்டல் சத்ததுடன் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு மாலை அணிவிக்கிறார். இது, அவரது அகந்தையை காட்டுகிறது, மேலும் இந்த சம்பவம் காங்கிரஸ் கட்சியின் உண்மையான மதிப்பை காட்டுகிறது" என பதிவிட்டுள்ளார்.


முன்னதாக லால் பகதூர் சாஸ்திரி சிலைக்கு பிரியங்கா மாலை அணிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வர, பிரியங்கா மாலை அணிவித்த சாஸ்திரி சிலை மீது கங்கை நீரை ஊற்றி பா.ஜ., கட்சியினர் சிலையை புனிதப்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.