Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.


இந்த வீடியோவில் ஒரு பாம்பையும் எலியையும் காண முடிகின்றது. வழக்கமாக பாம்புக்கு பலியாகும் எலி, இந்த வீடியோவில் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றது. 


முதலில், எலியைப் பிடிக்க பாம்பு படு சூப்பராக எம்பி குதிக்கிறது. ஆனால், அதற்குப் பிறகுதான் ஆச்சரியமே காத்துக்கொண்டு இருக்கின்றது. பாம்பு மற்றும் எலியின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாம்பு எலியை தாக்கிய விதம் மிகவும் அச்சுறுத்தும் காட்சியாக உள்ளது. 


ALSO READ | அம்மானா சும்மாவா? குட்டி எலிக்காக பாம்பை பந்தாடிய தாய் எலி: வைரல் வீடியோ


எலியின் மீது பாம்பின் தாக்குதல்


சமூகவலைத்தளங்களில் வைரலாகி (Viral Video) வரும் இந்த வீடியோவில், திறந்தவெளியில் பாம்பு ஒன்று காணப்படுகிறது. அதன் அருகில் ஒரு எலி இருப்பதையும் காணமுடிகிறது. வாய்ப்பு கிடைத்தவுடன், பாம்பு எலியை வாயால் பிடிக்க தாவி குதிக்கிறது.


தான் தாக்கப்படுவதால் அதிர்ச்சியடைந்த எலி, பாம்பை இரண்டு கால்களாலும் தள்ளிவிட்டு தப்பிச் செல்கிறது. அச்சப்படாமல், தன் வழக்கமான சுட்டித்தனத்தைக் காட்டி, தன் உயிரை காப்பாற்றிக்கொண்டது இந்த எலி. 


பயந்து போகாமல், தைரியத்தோடு பாம்பை எதிர்கொண்டு, எலி தனது உயிரை காப்பாற்றிய விதத்தை மக்கள் பாராட்டி வருகின்றனர். 


அந்த திக் திக் வீடியோவை இங்கே காணலாம்: 



வீடியோ வைரலானது


பாம்பு (Snake Video) மற்றும் எலியின் இந்த வீடியோ nature27_12 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் தலைப்பில், "பயங்காமான பாம்பு தாக்க வரும்போது, உயிரை காத்துக்கொள்ள எலியும் தன் திறமையைக் காட்டும்" என்று எழுதப்பட்டுள்ளது. 


இந்த வீடியோவை இணையவாசிகள் விரும்பி பார்த்து வருகிறார்கள், பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். ஏகப்பட்ட லைக்குகளையும் வியூஸ்களையும் அள்ளிக்குவிக்கும் இந்த வீடியோ நமக்கும் வாழ்க்கைக்கான ஒரு முக்கிய பாடத்தை அளிக்கின்றது.


 நமக்கு ஒரு ஆபத்து வரும்போது நம்மால் முடியாது என ஓய்ந்துவிட்டால், ஆபத்து நம்மை எளிதாக விழுங்கிவிடும். எலி காட்டிய தைரியத்தை நாமும் காட்டினால், எவ்வளவு பெரிய ஆபத்தையும் தள்ளிவிட்டு தப்பிக்கலாம்.


ALSO READ | Puppies Cute Video: கடும் குளிரில் நாய் குட்டிகள் குளிர் காய ‘தீ’ மூட்டிய கருணை மனம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR