பாம்புகளை பிடிக்க அசாத்திய திறமை வேண்டும். கொஞ்சம் மிஸ் ஆனாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. சில நேரங்களில் பாம்பு பிடிக்கும்போது, கவனக்குறைவாக இருந்தவர்கள் எல்லாம் பாம்பு கடிக்கு உள்ளாகி இறக்க நேரிட்டிருக்கிறது. ஆனால் இந்த வீடியோவில் உயிரை எடுக்க மாயாஜால வித்தைகள் காட்டிக் கொண்டு, வளைந்து நெளிந்து வந்த பாம்பை கச்சிதமாக கேட்ச் பிடித்து உயிர் பிழைத்திருக்கிறார் அந்த நபர். வைரலாகியிருக்கும் அந்த வீடியோவில், மலைப்பாம்பு ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்திருக்கிறது. உடனே அங்கிருப்பவர்கள் தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவிக்க, அந்த பாம்பை பிடிக்க பாம்புபிடி நிபுணருடன் அங்கு செல்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பெண்ணின் மீது ஏறிய குரங்கு செய்த குறும்பு: சிரிக்காம இருக்க முடியாது... வைரல் வீடியோ


அந்த நபரும் மலைப்பாம்பை லாவகமாக பிடிக்க முயற்சி செய்கிறார். சில நொடிகள் போக்கு காட்டிக் கொண்டு, மிகச் சீற்றத்துடன் இருகிறது அந்த மலைப்பாம்பு. திடீரென அந்த நபரை கொத்த செல்கிறது. இதனைப் பார்த்த அங்கிருந்தவர்களுக்கு பீதி ஏற்படுகிறது. கடைசியாக ஒருமுறை பிடித்துக் கொண்டிருந்த நபரை வாயை பிளந்து கொண்டு கொத்த செல்ல, எல்லோருக்கும் பயம் ஏற்படுகிறது. ஆனால் அந்த நபர் சரியாக பாம்பின் குரல்வளையை பிடித்து தப்பிக்கிறார். மெய்சிலிர்க்க வைக்கும் இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. எல்லோரும் பாம்பை சூப்பராக கேட்ச் செய்த அந்த நபரை வெகுவாக பாராட்டினர். 


பாம்பை பிடிக்கும் நபரின் வீடியோ ; 



இதேபோல் அண்மையில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு இளைஞர் பாம்பை பிடித்துக் விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். அவர் நாகப்பாம்பை பிடித்து கொன்று விட்டதாக நினைத்தார். அதன்பிறகு அந்த பாம்பை எடுத்து தன்னுடைய வாயில் கவ்வி இன்ஸ்டாகிராமுக்காக வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். உண்மையில் அந்த பாம்பு அப்போது உயிரோடு இருந்திருக்கிறது. அத்துடன் வாயில் கவ்விய அந்த இளைஞரின் நாக்கிலும் கொத்திவிட்டது. இதனை அறியாத அந்த இளைஞர் சில நிமிடங்களில் விஷம் உடல் முழுவதும் பரவி உயிரிழந்தார். 


இன்னொரு வீடியோவில் குடிமகன் ஒருவர் நாகப்பாம்புடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். கையை கொண்டு அந்த பாம்பின் வாயில் வைத்தபோதும் அந்த பாம்பு கடிக்கவே இல்லை. இந்த வீடியோவும் இப்போது வைரலாகியிருக்கிறது. 


மேலும் படிக்க | ஆக்ரோஷமாக தாக்கும் முதலை... சிக்கித் தவிக்கும் மலைப்பாம்பு... நெட்டிசன்களுக்கு ஷாக் கொடுத்த வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ