Viral Video: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குரங்கு, நாய், பூனை, சிங்கம், புலி ஆகிய விலங்குகளின் வீடியோக்கள் பகிர்ந்த உடனேயே வைரல் ஆகி விடுகின்றன. அதுவும் பாம்பின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் ஆர்வத்துடன் காண்கிறார்கள். பாம்புகளை அருகில் சென்று காண முடியாது என்பதால் இந்த வீடியோக்களின் மூலம் அவற்றின் நடவடிக்கைகளை மிக அருகிலேயே பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைப்பதெ இதற்கு காரணமாகும்.


சமீபத்தில் பாம்பின் ஒரு வீடியோ மிகவும் பிரபலமாக வைரலாகி வருகின்றது. இது மிகவும் ஒரு வித்தியாசமான வீடியோவாக உள்ளது. இதை பார்க்கும் போதே நம் உடல் சிலிர்த்துப் போகிறது.


வீடியோவின் துவக்கத்தில் ஒரு பெண்மணி படுத்து உறங்கிக் கொண்டிருப்பதை காண முடிகின்றது. அங்கே ஒரு நீளமான பாம்பு வருகிறது. அந்தப் பாம்பு அந்தப் பெண்ணின் தலையில் புகுந்து ஊர்ந்து செல்கிறது. அந்தப் பெண்ணிற்கு அது தெரியவில்லை. அவர் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருக்கிறார். பெண்ணின் தலைமுடி வழியாக சென்ற பாம்பு அவரது நெற்றிப் பக்கம் செல்கிறது. அப்போதுதான் அவருக்கு தன் தலையில் ஏதோ ஊர்ந்து செல்வதை போன்ற உணர்வு ஏற்படுகிறது. அவர் திடுக்கிட்டு தலையை தடவிப் பார்க்கிறார். தன் தலையை சுற்றி கட்டப்பட்டிருந்த துணியை அகற்ற முயல்கிறார். அதற்குப் பின் என்ன நடக்கிறது? இதைக் காண முடியவில்லை. ஏனென்றால் வீடியோ இதனுடன் முடிந்து விடுகிறது.


மேலும் படிக்க | ரோபோ நாயை பார்த்து மிரண்டு தலைதெறிக்க ஓடும் ரியல் நாய்க்குட்டி வீடியோ வைரல்!


பெண்ணின் தலையில் பாம்பு விளையாடும் வீடியோவை இங்கே காணலாம்: