தெலுங்கானாவில் ஐதாராபாத்தில், மிகவும் குறைவான எடையில் பிறந்த குழந்தையின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐதராபாத்தில் இருக்கும் ரெயின்போ மருத்துவமனையில் கடந்த 25 வாரங்களுக்கு முன்னர் குறைமாத குழந்தையாக பிறந்தவர் செர்ரி. குறிக்கப்பட்ட பிரசவ நாட்களுக்கு 4 மாதங்கள் முன்னதாகவே பிறந்த குழந்தை. இவர் பிறக்கையில் வெறும் 375கி எடை மட்டுமே கொண்டிருந்தார். 


தெற்கு ஆசியாவிலேயே மிகவும் குறைவான எடையிலை பிறந்த குழந்தை என்னும் பெயரினை இவர் பெற்றார். இதற்கு முன்னதாக கடந்த 2017-ஆம் ஆண்டு உதய்பூரில் ஸ்வேத்தா எனும் குழந்தை 400கி எடையில் பிறந்ததே சாதனையாக இருந்தது. 210 நாள் மருத்துவ கண்கானிப்பிற்கு பின்னர் இவர் 2.4 கிலோ எடைப் பெற்ற பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.






அதேப்போல் தற்போது ஐதாராபாத்தில் பிறந்திருக்கும் குழந்தையானது, 25 வார மருத்துவ கண்கானிப்பிற்கு பிறகு வீட்டிற்கு நலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சூழ்நிலைகளில் பிறக்கும் குழந்தைகள் உயிர்பிழைப்பது மிகவும் அறிது எனவும், இதுவரை 0.5% குழந்தைகள் மட்டுமே உயிர் பிழைத்துள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


இச்சம்பவத்தின் புகைப்படங்களை ரெயின்போ மருத்துவமனை இணையத்தில் பகிர்ந்துள்ளது.