20 தோப்புக்கரணத்துக்கு இலவச பேருந்து டிக்கெட்! ஒல்லியாக ஊக்குவிக்கும் நாடு
Squat Viral Video: தோப்புக்கரணம் போட்டால் இலவச பேருந்து டிக்கெட் தரும் நாடு என்பதைக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கிறது. மக்களின் ஆரோக்கியத்திற்கான முயற்சியை இந்த நாடு எடுத்துள்ளது
பிஸியான வாழ்க்கையில், மக்கள் தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்கிறார்கள். அதிகாலையில் எழுந்த உடனே, பூங்காவிற்கு சென்று வாக்கிங், ஜாகிங் எக்சர்சைஸ் செய்வது டல் ஆரோக்கியத்தை மேம்படுத்தத் தானே? உடற்பயிற்சி செய்ய ஜிம்மிற்கு செல்பவர். தன்னை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவே செலவௌ செய்கின்றனர். காடு கொடுத்து ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதற்கு பதிலாக தோப்புக்காரணம் இலவச பேருந்து டிக்கெட்டுகளைப் பெறுங்கள் என்று சொல்லும் நாடு எது தெரியுமா?
தோப்புக்கரணம் போட்டால் இலவச பேருந்து டிக்கெட் தரும் நாடு ருமேனியா. ருமேனியா தனது குடிமக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், ஒரு இளம் பெண் இயந்திரத்தின் முன் 20 தோப்புக்கரணம் போடுகிறார்.
மேலும் படிக்க | மச்சினிச்சி போட்ட ஆட்டத்துக்கு மாப்பிள்ளையின் ரியாக்ஷன்; வைரல்
அவருடைய தோப்புக்கரணம் 20 என்ற எண்ணிக்கையை அடைந்தவுடன் அவருக்கு முன்னால் உள்ள இயந்திரத்திலிருந்து ஒரு பஸ் டிக்கெட் வருகிறது. இந்த வீடியோவை Instagram பயனர் @alinabzholkina பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ சில வாரங்களுக்கு முன்பு பகிரப்பட்டது. இது பதிவேற்றப்பட்டதிலிருந்து, இது ஆயிரக்கணக்கானவர்கள் லைக் போட்டுள்ளனர். "பணத்தை சேமித்துக் கொண்டே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது இப்படித்தானா?" என்று பதிவிட்டுள்ளார்.