ஸ்ரீநகரில் கொட்டித் தீர்க்கிறது பனிமழை...வீடியோ உள்ளே!!
காஷ்மீரில் கொட்டித் தீர்க்கும் பனிமழையால் ஸ்ரீநகரின் திரும்பிய திசை எல்லாம் பனி மூடி ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
காஷ்மீரில் கொட்டித் தீர்க்கும் பனிமழையால் ஸ்ரீநகரின் திரும்பிய திசை எல்லாம் பனி மூடி ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இன்று அதிகாலை முதல் பனிமழை பெய்து வருகிறது. இந்த பனிமழையால் ஸ்ரீநகரின் கட்டிட மேற்கூரைகள் அனைத்துமே பனிபடர்ந்து காணப்படுகின்றது. சாலைகளின் இருமருங்கிலும் பனிக் கொட்டி கிடக்கிறது. சாலையில் உள்ள பனிகளை அகற்றி போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பனிமழை தொடரும் நிலையில் பொதுமக்கள் குடைகளை பிடித்தபடி தங்களின் அன்றாட பணிகளில் சிரமத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சிக்கிம் மாநிலத்தில் நிலவும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பனி படர்ந்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.