இந்த ஆண்டின் முதல் கவர்ச்சியான புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் கவர்ச்சி நடிகை சன்னிலியோன்......


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலிவுட்டின் "பேபி டால்" என அழைக்கப்படுபவர் சன்னி லியோன். அடல்ட் ஸ்டாராக அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் சமீபகாலமாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறார். 


மேலும் தற்போது சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்றினை இணைய தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. இதை தவிர தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் வீரமாதேவி வரலாற்று படத்திலும் நடித்து வருகிறார். வரலாற்று கதையில் உருவாகும் இப்படத்தை வடிவுடையான் இயக்குகிறார். இதனைத் தொடர்ந்து, மலையாளத்திலும் 'ரங்கீலா' எனும் படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார்.  


இந்தப் படத்தை சந்தோஷ் நாயர் என்பவர் இயக்க பேக்வாட்டர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதன் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கிறது. அது மட்டுமல்லாது மம்மூட்டி நடிக்கும் 'மதுரராஜா' படத்திலும் தமிழில் விஷால் நடிக்கும் 'அயோக்யா' படத்திலும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட இருக்கிறார். சன்னி லியோனுக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். 


இந்நிலையில், நடிகை சன்னிலியோன் தனது ட்விட்டர் பக்கத்தில் 2019 ஆம் ஆண்டின் முதல் கவர்ச்சியான புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்துடன் அவர், அனைவரும் இங்கு கவனியுங்கள்..!! 2019-ல் எனது புதிய புகைப்படம் என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இந்த ஆண்டு நாள்குறிப்புகாக கொடுக்கப்பட்ட புகைப்படம் எனவும் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.