சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தமிழ் சின்னத்திரையில் பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. ஒவ்வொரு சீசனிலும் பங்கேற்கும் போட்டியாளர்கள் ஆரம்பத்தில் யாரென்றே தெரியாதவர்களாக இருந்தாலும் சீசன் முடிந்து அவர்கள் வெளியில் செல்லும்போது பெரிய ரசிகர் கூட்டத்துடன் தான் செல்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி சூப்பர் சிங்கர் 8வது (Super Singer 8) சீசனின் இறுதிப்போட்டி அண்மையில் தான் நடைபெற்றது. இந்த சூப்பர் சிங்கர் 8வது சீசன் போட்டியில் அபிலாஷ், பரத், அணு, முத்து சிற்ப்பி, ஸ்ரீதர் சேனா மற்றும் மானசி ஆகிய ஆறு பேர் ஃபினாலே போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்.


ALSO READ | சூப்பர் சிங்கர் பட்டத்தை வென்ற போட்டியாளர்: 2ம் இடம் 3ம் இடம் யாருக்கு


இந்த நிகழ்ச்சியின் இறுதிபோட்டி பிற்பகல் 3 மணிக்கு துவங்கி, தொடர்ந்து 6 மணி நேர ஷோவாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த போட்டியில் நடுவர்களாக அனுராதா ஸ்ரீராம், உன்னிகிருஷ்ணன், பென்னி தயாள், எஸ்பிபி சரண் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியை மகாபா ஆனந்த்தும், பிரியங்காவும் தொகுத்து வழங்கினர். அத்துடன் இறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டார். இவர்கள் தவிர பிரபல இசை பாடகர்களான சித்ரா, மால்குடி சுபா, அனந்த் வைத்தியநாதன், கல்பனா, தீ, சந்தோஷ் நாராயணன், ஹரிஷ் கல்யாண், செஃப் தாமு உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 


இந்நிலையில் இந்த சீஸனின் வெற்றியாளராக ஸ்ரீதர் சேனா (Sridhar Sena) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் ரசிகர்களைக் கவர்ந்த ஸ்ரீதர் வெற்றி பெற்றிருப்பது பலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இதற்கிடையில் ஸ்ரீதர் சேனா தனக்கு ஆதரவளித்த அனைவர்க்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றைப் பதிவு செய்திருக்கிறார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது.,


 



 


அனைவருக்கும் எனது பெரிய நன்றிகள். இந்த வெற்றி எனக்குக் கிடைக்கக் காரணம் நீங்கள்தான். உலகம் முழுவதும் நிறையப் பேர் என்னை உங்க வீட்டுப் பையனா பார்க்குறீங்கன்னு நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. இந்த அன்பும் ஆதரவும் எப்போதும் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்து வாக்களித்த மக்கள் அனைவர்க்கும் தன் வெற்றியை சமர்ப்பித்தார் ஸ்ரீதர் சேனா.


ALSO READ | Bigg Boss Tamil Season 5: இரண்டாவது புரொமோ வீடியோ வெளியானது; கசிந்தது முக்கிய தகவல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR