சூப்பர்ஸ்டார் ரஜினியின் 165 வது படத்தின் டைட்டில் வெளியீடு
ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் தலைப்பு வெளியிடப்பட்டது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ரஜினி நடிக்கும் 165வது படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது. அந்த படத்தின் பெயர் "பேட்ட".
கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ரஜினி நடிக்கும் 165வது படத்தின் டைட்டில் இன்னும் 10 நிமிடத்தில் வெளியிடப்படும்
ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் தலைப்பு இன்று மாலை வெளியாகிறது....!
கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் தற்போது ரஜினி நடித்து வருகிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். முதன்முறையாக மாமா ரஜினியின் படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத்.
இதன் படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வரும் வேலையில் இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், படத்தின் பெயர், மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட படும் என காலை அறிவித்திருந்தது.
நடிகர் ரஜினிகாந்தின் 165-வது படமான பெயர் வைக்கப்படாத இந்த படமும் அரசியல் சார்ந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. படத்தின் பெயர் மற்றும் மோஷன் போஸ்டரும் அரசியல் சார்ந்து வெளியிடப்பட்டால் அதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து, படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாக இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. அதில் முந்தைய ரஜினி படங்களின் டைட்டில்கள் வந்துப் போகின்றன. 33 விநாடி கொண்ட அந்த வீடியோவில் முதல் 20 விநாடி இப்படி டைட்டில்களாக வர, அடுத்து வரும் அனிருத் டைட்டில் என்னவா இருக்கும் என்கிறார்? பிறகு த்ரிஷா, சிம்ரன், நாவாசுதீன், முனீஸ்காந்த், பாபி சிம்ஹா என அடுத்து வரும் அனைவரும் விதவிதமாக யோசிக்க, கடைசியில் வரும் விஜய் சேதுபதி சிரிக்கிறார்.