ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் 'காலா'. இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹியூமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், 'வத்திக்குச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்‌ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா உள்ளிட்ட பலர் ரஜினியோடு நடித்திருக்கிறார்கள்.


சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இப்படத்துக்கு கபிலன், உமாதேவி பாடல்களை எழுதியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு முரளி, கலை ராமலிங்கம், எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத், சண்டைக் காட்சிகள் திலீப் சுப்பராயன், நடனம் சாண்டி, ஆடை வடிவமைப்பு அனுவர்தன், சுபிகா உள்ளிட்ட படக்குழுவினர் பணிபுரிந்திருக்கிறார்கள்.


கடந்த டிசம்பர் 12-ம் தேதி சூப்பர்ஸ்டார் பிறந்தநாளில், நடிகர் தனுஷ் காலா படத்தின் புதிய போஸ்டர் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை தூண்டியது.


இந்நிலையில், இன்று காலா படத்தின் டப்பிங் வேலைகள் இன்று தொடங்கியுள்ளது.