பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் நான்காவது சீசன், பிக் பாஸ் தமிழ் ஒரு மாதத்திற்கும் மேலாக வெற்றிகரமாக இயங்குகி வருகிறது. இதுவரை இரண்டு வைல்டு கார்டு என்ட்ரி நடந்து விட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீபாவளி உள்ளிட்ட இரண்டு வாரங்கள் பிக்பாஸில் (Bigg Boss Tamilஎவிஷன் நடைபெறவில்லை என்பதால், சுச்சி வெளியேறியும் கூட தற்போது வீட்டின் உள்ளே 14 பேர் இருக்கின்றனர். அதே நேரம் 50 நாட்களை பிக்பாஸ் கடந்து விட்டது. இந்த போட்டியில் தற்போது ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் விளையாடி வருகின்றனர். 



 


ALSO READ | சுசித்ரா வெளியேற்றம், இந்த வாரம் நாமினேட் ஆன 7 போட்டியாளர்கள் இவர்களே!


தற்போது வரை இதில் ரேகா, சுரேஷ் சக்ரவர்த்தி, வேல்முருகன் மற்றும் சுசித்ரா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த வார நாமினேஷன் இல் மொத்தம் 7 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சோம், பாலாஜி, ஆரி, ஜீத்தன் ரமேஷ், அனிதா, சனம் ஷெட்டி மற்றும் நிஷா ஆகியார் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். 



இந்நிலையில் சுரேஷ் சக்ரவர்த்தி விரைவில் 'பிக் பாஸ் 4' இல் மீண்டும் இணைய உள்ளார் என்ற பரபரப்பான செய்தி இப்போது வந்துள்ளது. அவர் ஏற்கனவே வெளியே வந்து இரண்டு வாரங்கள் ஆகி உள்ளது. 


 


ALSO READ | பிக் பாஸ் தமிழ் 4 : இந்த போட்டியாளர் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR