ஆறறிவு கொண்ட மனிதனுக்கு மட்டும் தான் உணர்ச்சிகளும் உணர்வுகளும் சொந்தமானதா? இந்தக் கேள்விக்கு இல்லை என்று சொல்வதற்கு முன் ஒரு நொடி கூட சிந்திக்கவே வேண்டாம். பாசம், அரவணைப்புகள் எல்லாம் மனிதர்களிடம் மட்டுமே இருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தால் தவறு. ஆறாவது அறிவு என்ற ஒன்றை அதிகமாக வைத்திருக்கும் மனிதர்களைக் காட்டிலும் விலங்குகளிடம் அன்பு மற்றும் காருண்யத்தை நாம் அதிகம் பார்க்கலாம் என்பது நிதர்சனமான உண்மை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதனால் தான், இன்று பலரின் வீடுகளிலும் செல்லப்பிராணி வளர்ப்பது அதிகமாகிவிட்டது. வீட்டில் வளர்க்கும் நாய் மற்றும் பூனைகளிடம் உணரும் அன்பு அலாதியானதாக இருக்கலாம். ஆனால், காடுகளில் வசிக்கும் விலங்குகளுக்கும் தோழமைகள் உண்டு. அவைகளும் ஒன்றுக்கொன்று நட்பு வட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ண்டு இணைந்து வாழ்கின்றன.


மேலும் படிக்க | Viral Video: மின்னல் வேகத்தில் பாய்ந்து இரையை துல்லியமாக பிடிக்கும் சிறுத்தை!


தற்போது விலங்குகளிடையே இருக்கும் நெகிழ்ச்சியான பாசத்தை, அன்பைக் காட்டும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. வீடியோவையைப் பார்த்தால் மனம் நெக்குருகிப் போகும்.



 


வைரலாகும் வீடியோவில் தனியாக அமர்ந்திருக்கும் பூனையைப் பார்த்த, குரங்கு, மெதுவாக நடந்து சென்று, அதை கட்டிப் பிடித்து அரவணைக்கிறது. அதை விரும்பும் பூனையும் நிம்மதியாய் உணர்கிறது.


இந்த நட்பை பார்க்கும்போது, மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த வீடியோ ஆயிரக்கணககன பார்வைகளைக் கடந்துள்ளது. இந்த வீடியோவுக்கு கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன்கள், குரங்கு மற்றும் பூனையின் நட்பு மனிதர்களுக்கே எடுத்துக்காட்டாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


உறவுகளுக்கான முக்கியத்துவம் குறைந்து இருக்கும் இந்த காலத்தில், உறவின் அருமையை இந்த வீடியோ கண்முன்னே உணர்த்துவதாகவும் நெட்டிசன்கள் நெகிழ்கின்றனர்..  


மேலும் படிக்க | Viral Video: சிங்கங்களை தெறிக்க விட்ட நீர்யானை! ஆளை விடு என தலைதெறிக்க ஓடும் சிங்கங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ