Tallest woman: 7 அடி 0.7 அங்குல உயரம்! உலகிலேயே உயரமான பெண்
7 அடி 0.7 அங்குலம் உயரம் உள்ள ருமேசா கெல்கி, தற்போது உலகில் வசிக்கும் அனைத்துப் பெண்களிலும் மிக உயரமான பெண்மணி
துருக்கியைச் சேர்ந்த பெண் உலகின் மிக உயரமான பெண்ணாக அறிவிக்கப்பட்டுள்ளார். 24 வயதான ருமேசா கெல்கி என்ற துருக்கி நாட்டு பெண் உலகின் மிக உயரமான பெண் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.
7 அடி 0.7 அங்குலம் (215.16cm) உயரம் இருக்கும் ருமேசா கெல்கி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இவர் தான் தற்போது உலகில் வசிக்கும் அனைத்துப் பெண்களிலும் மிக உயரமான பெண்மணி என்று கின்னஸ் புத்தகம் பதிவு செய்துள்ளது.
ருமேசா கெல்கி எப்படி இவ்வளவு உயரம் வளர்ந்தார்? மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, ருமேசாவின் நம்பமுடியாத உயரத்திற்குகாரணம் வீவர்ஸ் நோய் தான். இது மிகவும் அரிய மரபணு கோளாறாகும். இந்த நோய் பாதித்தவர்கள், திடீரென அபரிதமான வளர்ச்சியடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏழடிக்கும் மேல் உயரமாக உள்ள ருமேசாவின் கைகள் 24.5 செமீ நீளமும், பாதங்கள் 30.5 செ.மீ. நீளமும் உள்ளவை. ருமேசாவின் உயரம் காரணமாக அவரது உடலின் உறுதி, பிறருடன் ஒப்பிடும்போது குறைவாகவே இருக்கிறது. அவருக்கு நடப்பதும் சற்று சிரமம் தான்.
இதுமட்டுமல்ல, பல்வேறு ஆரோக்கிய சிக்கல்களையும் எதிர்கொள்கிறார் இந்த உலகின் உயர்ந்த பெண்மணி. சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் ருமேசா, வாக்கிங் ஸ்டிக் மூலம் மெதுவாக நடக்கிறார்.
Read Also | Guinness Records: 1360 கிமீ பயணத்தை ஒரே பயணத்தில் முடித்த டொயோட்டா Mirai
"ஒருவருக்கு ஏற்படும் குறைபாடு ஏதோ ஒரு இடத்தில் உங்களுக்கு நன்மையாக மாறலாம். எனவே நீங்கள் யார் என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளுங்கள், உங்கள் திறனைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அதுமட்டுமல்ல உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்" என்று ருமேசா கூறுகிறார்.
"ருமேசாவை மீண்டும் சாதனைப் புத்தகத்தில் வரவேற்பது பெருமையாக உள்ளது. அவரது மன உறுதி மற்றும் பிறரில் இருந்து வித்தியாசமாக இருக்கும் தன்மை உலகில் உள்ள அனைவருக்கும் உத்வேகம் கொடுப்பது. உயரமான உயிருள்ள பெண்க்ள் பட்டியலில் மாறுதல்கள் அடிக்கடி ஏற்படுவதில்லை எனவே இந்த செய்தியை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கின்னஸ் உலக சாதனையின் தலைமை ஆசிரியர் கிரேக் க்ளென்டே தெரிவித்தார்.
Read Also | வேற்று கிரகவாசிகளை பார்க்க வேண்டுமா? கூடுதல் இணைப்பாக வைரசும் கிடைக்கலாம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR