பாஜக-பாமக-அதிமுக கூட்டணி, மோடியை மீண்டும் பிரதமராக்கும் பலமான கூட்டணி என தமிழக பாஜக தேசிய செயலாளர் H ராஜா தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெரும் சர்ச்சைகளுக்கு இடையில் நேற்று பாஜக-பாமக-அதிமுக கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டு அறிவிப்புகள் வெளியானது. இந்த அறிவிப்பு வெளியானது முதல் பாமக-அதிமுக தொண்டர்கள் இடையே பெரும் ஏமாற்றம் நிலவி வருகின்றது.


பாஜக-வின் சென்டர் பார்முலா தமிழத்திலும் பலித்துவிடுமோ என எதிர்கட்சிகள் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் தற்போது உருவாகியுள்ள கூட்டணி மத்தியில் மோடி அரசை மீண்டும் கொண்டுவரும் மகா கூட்டணி என தமிழக பாஜக தேசிய செயலாளர் H ராஜா தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது...



"தமிழகத்தில் மத்தியில் நிலையான ஆட்சியையும் மோடிஜி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு வலிமையான கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. பாஜகவைப் பொருத்தவரை 40 தொகுதிகளிலும் மோடிஜியே வேட்டாளர் எனக்கருதி கடுமையாக உழைத்திடுவோம். தீயசக்தி திமுகவிற்கு பாடம் புகட்டும் நேரமாவது."


நேற்றைய தொகுதி பங்கீட்டிற்கு பின்னர், அதிமுக கூட்டணியில் பா.ம.க-வுக்கு 7 தொகுதிகளும் பா.ஜ.க-வுக்கு 5 இடங்கங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக தமிழக பாஜக தேசிய செயலாளர் H ராஜா எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை அல்லது மத்திய சென்னைத் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அதிமுக இதற்கு அதிருப்தி தெரிவித்த நிலையில் அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டார் எனவும், பாஜக தலைமை அவருக்கு  ராஜ்யசபா எம்.பி பதவி தருவதாக வாக்குறுதி கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.