வகுப்பில் ‘ஆபாச நடிகை’ பெயரை தவறுதலாக உச்சரித்த ஆசிரியர்!
வாழ்வில் நாம் அனுபவத்தி அதிகப்படியான நகைச்சுவை தருணங்கள் நம் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் தான இருக்கும்!
வாழ்வில் நாம் அனுபவத்தி அதிகப்படியான நகைச்சுவை தருணங்கள் நம் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் தான இருக்கும்!
சக மாணவர்களை வேடிக்கையாக பிரச்சனையில் மாட்டி விடுவது, ஆசிரியரின் இருக்கையில் பசை ஒட்டுவது என பல விஷயங்களை நாம் கடந்து வந்திருக்க கூடும். வகுப்பில் படிப்பை வைத்து சிலர் பிரபலமாக பலர் தங்களது குறும்புத்தனத்தை வைத்து பிரபலமாவதையும் நாம் பார்த்திருப்போம்.
இந்த தருணங்கள் நான்கு சுவர்களுக்குள் சிலரை பிரபலமாக்கி வந்த நிலையில் தற்போது இளசுகள் கையில் உள்ள இணைய வசதி அவர்களை உலக அளவில் பிரபலமாக்கி விடுகிறது. அந்த வகையில் தான் தற்போது ஜெய்பூர் மனிப்பால் கல்லூரி மாணவர் தனது ஆசிரியரை ‘ஆபாச நடிகை’-யின் பெயரை வைத்து செய்த சில்மிசம் உலக அளவில் பிரபலமாகி உள்ளது.
ஜெய்பூர் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் தங்களது வகுப்பு மாணவர்கள் வருகை பதிவேட்டில் பிரபல ஆபாச நடிகை மியா கலிப்பா-வின் பெயரை இணைத்து, ஆதனை ஆசிரியருக்கே தெரியாமல் வைத்துள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத ஆசிரியர் வழக்கம் போல் வருகை பதிவேட்டை வாசிக்கும் போது மியா கலிப்பா-வின் பெயரினையும் படித்துவிடுகின்றார்.
இதனை கேட்கும் மாணவர்கள் சில நிமிடங்களுக்கு சிரிப்பினை நிறுத்தமால் அறையை அதிர வைக்கின்றனர். வகுப்பில் என்ன நடக்கிறது என தெரியாமல் பரிதவிக்கும் ஆசிரியர் சற்று நேரத்திற்கு பின்னர் என்ன நடந்தது என புரிந்துக்கொள்கிறார். இந்த சம்பவம் வீடியோவாக இணையத்தில் பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.