புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி வீரர்கள் ராணுவ தொப்பியுடன் களம் இறங்கினர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ஆம் தேதி ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன் சொகுசு காரை மோதச் செய்தான். இந்த விபத்தில் 40 CRPF வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.


வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் தொடங்கியபோது இந்திய வீரர்கள் கையில் கருப்புப் பட்டையணிந்து விளையாடினர்.



இந்நிலையில் இன்று இந்தியா - ஆஸ்திரேலியா இடையியே ராஞ்சியில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ராணுவ தொப்பியுடன் களம் இறங்க இந்திய அணி முடிவு செய்தது. அதன்படி வீரர்கள் ராணுவ தொப்பியுடன் பீல்டிங் செய்ய வந்தனர். 


முன்னதாக இன்றைய ஆட்டத்திற்கான டாஸ் நிகழ்வின் போது ராணுவத் தொப்பியுடன் வந்த கோலி, இன்றைய போட்டியில் தாங்கள் வாங்கும் ஊதியத்தையும் மத்திய பாதுகாப்பு நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.


BCCI லோகோ பதித்த இந்த ராணுவ தொப்பியினை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனி, அணியின் வீரர்கள் அணைவருக்கும் வழங்கினார்.