சுட்டு பிடிக்க உத்தரவு திரைப்படத்தின் teaser வெளியானது!
சுட்டு பிடிக்க உத்தரவு திரைப்படத்தின் டீஸரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!
சுட்டு பிடிக்க உத்தரவு திரைப்படத்தின் டீஸரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், போக்கிரி ராஜா ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் சுசீந்திரன் மற்றும் விக்ராந்த் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் சுட்டு பிடிக்க உத்தரவு. கல்பதரு பிக்சர்ஸ் ராம் மோகன் இப்படத்தினை தயாரிக்க இயக்குநர் ராம்பிரகாஷ் இயக்கி வருகின்றார்.
இத்திரைப்படத்தில் இரண்டு முக்கிய இயக்குநர்கள் நடிக்கவுள்ளனர் என படக்குழுவினர் அறிவித்த நாள் முதலே இப்படத்தின் மீதான தாக்கம் ரசிகர்களிடே ஒட்டிக்கொண்டது. பின்னர் சமீபகாலமாக இணையத்தை குறும்படங்களால் கலக்கி வரும் அதுல்யா இத்திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியானது, இப்படத்தின் மீதான ஆர்வத்தை மீண்டும் கூட்டியுள்ளது.
மேலும் இப்படத்தின் கதை குறித்து இயக்குநர் வெளியிட்ட தகவல்கள், மேலும் இப்படத்தின் மீதான ஆர்வத்தை கூட்டியுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் டீஸரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக படத்தின் இயக்குநர் படத்தின் கதை குறித்து தெரிவிக்கையில்.. விக்ராந்த் மற்றும் சுசீந்திரன் ஆகிய இருவரும் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்துக்கொண்டு இருக்கையில் ஒரு திகிலூட்டும் சம்பவம் நடக்கின்றது. இதனை சம்பவத்தை விவரிக்கும் வகையில் இந்த திரைப்படத்தின் திரைகதை அமைந்திருக்கும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது!