நவீன கால காதல்கள் புறா தூதில் இருந்து போன் தூதிற்கு எப்போதே மாறிவிட்டது. அதற்கு பெரும் உதவியாய் இருப்பவை மொபைல் dating செயலிகள் தான்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

dating செயலிகள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றில் பிரபலமானது Tinder செயலிதான். Tinder என்பது ஒரு dating செயலி ஆகும். பயனர்களுக்கு அருகில் இருக்கும் நபர்களை இடப்புறம் தள்ளல், வலப்புறம் தள்ளல் என்று வசதிகளின் மூலம் தனக்குறிய நட்புகளை தேடிக்கொள்ள வழிவகுக்கிறது.



இந்த செயலி பலருக்கு நன்மை செய்திருந்தாலும் ஒரு சிலருக்கு பெரும் அதிர்ச்சியினை கொடுக்கிறது. அந்த வகையில் தான் ஸ்வீடன் இளைஞர் ஒருவரது வாழ்வில் விளையாடியுள்ளது.


Tinder பயனரான இவர் தனது சகோதரிக்கே காதல் தூது அனுப்பியுள்ளார். இந்த விஷயத்தினை Weston Koury என்னும் ட்விட்டர் கணக்கு உரிமையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது