அமெரிக்காவில் ஒரு மிருகக்காட்சிசாலையில் உள்ள ஒரு புலி கொரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டதாக செய்தி வெளியான பிறகு, தெலுங்கானாவில் உள்ள ஒரு விவசாயி தனது ஆடுகளை கொடிய வைரஸிடம் இருந்து காப்பாற்ற ஒரு புதுமையான யோசனையுடன் வந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வர ராவ் என்ற விவசாயி தனது ஆடுகளை கொரோனாவிடம் இருந்து காப்பாற்ற, ஆடுகளின் முகங்களில் முகமூடிகளைக் கட்டி, மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு கொரோனா பரவுவதைப் பாதுகாத்து வருகிறார்.


உள்ளூர் ஊடக தகவல்கள் படி கல்லுரு 'மண்டல்' (தொகுதி)-யில் உள்ள பெருவஞ்ச கிராமத்தில் உள்ள நபர் துணியிலிருந்து சிறப்பு முகமூடிகளை உருவாக்கி தனது 20 ஆடுகளின் முகங்களை மூடியுள்ளார்.


@rohitdas3188

 

 original sound - khilesh shing rajput

நியூயார்க்கின் பிராங்க்ஸ் மிருகக்காட்சிசாலையில் உள்ள ஒரு புலிக்கு கொரோனா வைரஸ் பரவியதாகவும், இந்தியாவின் அனைத்து உயிரியல் பூங்காக்களிலும் உள்ள அதிகாரிகள் விலங்குகளைப் பாதுகாக்க சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் செய்தித்தாள்களில் படித்த பிறகு தான் இவ்வாறு செயல்பட்டதாக ராவ் கூறினார்.


கால்நடைகளை பாதுகாக்க முகமூடி அணிவித்திருக்கும் ராவ், தனது ஆடுகள் மட்டுமே தனது குடும்பத்திற்கு வருமான ஆதாரமாக இருப்பதாகவும், எனவே அவர்களுக்கு முகமூடிகளை அணிவித்து கொரோனாவில் இருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.