திரைப்படமாகிறது இந்திய டென்னிஸ் வீராங்கனை சானிய மிர்ஷாவின் வாழ்க்கை வரலாறு! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானிய மிர்ஷா மற்றும் பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர் சொயிப் மாலிக் இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொடணர். சமீபத்தில் தங்களது 8-ஆம் ஆண்டு திருமண நாளினை கொண்டாடிய இத்தம்பதியர் தற்போது தங்கள் குடும்பத்தில் புதிய உறுப்பினராக ஆண் குழந்தை பிறந்தது. 


இந்நிலையில், சானியா மிர்சாவின் வாழ்க்கையை திரைப்படமாக்குவது குறித்து தற்போது அதிகாரபூர்வமான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதையடுத்து, ஹைதரபாதில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாலிவுட் இயக்குனர் ரோனி ஸ்கிரிவாலா இப்படத்தை இயக்க உள்ளதாக அறிவித்தார். இதற்கான ஒப்பந்தத்தில் தாம் கையெழுத்திட்டிருப்பதாகவும் படத்தில் சானியா வேடத்தில் நடிப்பது யார் என்பது விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் சானியா மிர்சா தெரிவித்தார். மேலும், இப்படத்தை பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ரோனி ஸ்க்ருவாலா தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 


இந்த வேடத்தில் சானியா மிர்சாவே நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே மேரிகோம், டங்கல், பாக் மீகா பாக், எம்.எஸ்.தோனி உள்ளிட்ட திரைப்படங்கள் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.