`நேர்கொண்ட பார்வை` திருவிழா ஆரம்பம்!! ட்விட்டரை தெறிக்கவிடும் தல ரசிகர்கள்!!
இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், திருவிழா ஆரம்பத்த தல ரசிகர்கள்.
புதுடெல்லி: இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், திருவிழா ஆரம்பத்த தல ரசிகர்கள். "நேர்கொண்ட பார்வை" முன்பதிவு குறித்தும், சிங்கப்பூரில் நடைபெற்ற பிரீமியர் காட்சி குறித்தும் சமூக ஊடகங்களில் கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.
பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் லட்சிய தமிழ் படமான "நேர்கொண்ட பார்வை" ஆகஸ்ட் 6 ஆம் தேதி சிங்கப்பூர் திரையரங்குகளில் பிரீமியர் காட்சி திரையிடப்பட்டது. தல அஜித் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தை பற்றி சிங்கப்பூரில் பிரீமியரில் கலந்து கொண்ட பார்வையாளர்களிடமிருந்து என்ன மாதிரியான கருத்து வெளிப்பட்டது என்று பார்போம்.
அஜித் குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆன்ட்ரியா தாரியாங், அபிராமி வெங்கடாச்சலம், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடித்துள்ள, இந்த படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கியுள்ளார். 2016 ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த 'பிங்க்' திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீ-மேக் ஆகும். இப்படம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலகளவில் வெளியிடப்பட உள்ளது.