வைரலாகும் குழந்தை முகத்துடன் இருக்கும் தல அஜித்-ன் லேட்டஸ்ட் புகைப்படம்!
தல அஜித் குழந்தை முகத்துடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது!!
தல அஜித் குழந்தை முகத்துடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது!!
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் (Boney Kapoor) தயாரிப்பில் உருவான, தல அஜித் (Thala Ajith) நடித்த "நேர்கொண்ட பார்வை" கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களை இயக்கிய வெற்றி இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி இருந்தார். 'நேர்கொண்ட பார்வை'-யின் வெற்றியால், இக்கூட்டணி மீண்டும் 'வலிமை’ (Valimai) படத்தில் இணைந்தது. 'ஈஸ்வர மூர்த்தி' என்ற பெயரில் காவல்துறை அதிகாரியாக அஜித் நடிக்கிறார்.
தற்போது, ஹைதராபாத், ராஜஸ்தானில் படப்பிடிப்பை முடித்த படக்குழு தற்போது சண்டைக் காட்சிக்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இம்மாத இறுதிக்குள் படத்தை முடித்து அஜித்தின் 50-வது பிறந்தநாளான மே 1 ஆம் தேதி தியேட்டர்களில் கொண்டுவர கடுமையாக உழைத்து வருகிறது.
ALSO READ | அஜீத் ரசிகர்களின் புத்தாண்டு விழா ஆரம்பம்!! விரைவில் “வலிமை” மோஷன் போஸ்டர்!
விஜய், தனுஷ், சூர்யா என முன்னணி நடிகர்களின் அடுத்தடுத்த படங்களின் வெளியீடுகளும் அப்டேட்டுகளும் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் நிலையில், வலிமை படத்தின் அப்டேட் எதுவும் இதுவரை வெளியாகாததால் ரசிகர்கள் அப்டேட் கேட்டு வருகிறார். இதனால், வலிமை படத்தில் அஜித் பைக் ஓட்டும் புகைப்படம் சமீபத்தில் வைரலானது. இந்நிலையில், அஜித் கருப்புநிற டி ஷர்ட்டில் புன்னகைக்கும் புதிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டில் உள்ளது. இதனால், அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
மேலும், இந்தப் புகைப்படத்தை பார்க்கும் போது வேதாளம் படத்தில் அஜித், கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரோ என்ற வசனம் பேசும் போது எப்படி குழந்தை முகமாக இருக்கும் போது அது போன்ற புகைப்படம் தான் தற்போது வெளியாகியுள்ளது. வலிமை படம் வரும் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR