ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, இன்னும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தில் நடிக்கும் வில்லன்களை பற்றிய தகவல்களை அவர்கள் தெரிவித்திருந்தனர். ராதாரவி, மற்றோருவர் பழம்பெரும் அரசியல் தலைவர் பழ.கருப்பையா என்றும் தெரிய வந்துள்ளது. மூன்றாவது வில்லன் பெயரை கேட்டால் ரசிகர்கள் ஆச்சரியப்படுவார்கள் என்றும், அந்த அளவுக்கு அந்த நடிகர் பிரபலமானவர் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். இப்படத்தில் முக்கிய வில்லனாக நடிகர் ராதாரவி நடிக்கின்றார். 


இந்நிலையில் தளபதி 62 படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் படிப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் நடந்தது. அங்கு விஜய் இளைஞர்களுடன் பைக்கில் ஊர்வலம் செல்வது போன்ற காட்சி புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது படக்குழுவை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.