மத பேதங்கள், மத மாச்சரியங்கள் ஏதும் இல்லாமல் இஸ்லாமியர் ஒருவர் மகாபாரதத்தின் பாடலை பாடுவது அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. ‘இது தான் உண்மையான இந்தியா’ என்று மக்கள் பாராட்டுகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல மகாபாரத தொலைகாட்சித் தொடரின் முகப்புப் பாடலான ‘மகாபாரத’ பாடலை சரியான உச்சரிப்பில் பாடுகிறார் இந்த இஸ்லாமியர். இந்த பாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. அதுமட்டுமல்ல, பரவலாக இந்தியர்களின் இதயங்களையும் நெகிழச் செய்துள்ளது. பாடலை பாடும்போது, அந்தப் பாடலின் இடையில் வரும் சங்கு ஒலிக்கும் சப்தத்தையும் அவரே எழுப்புகிறார். அதன்பிறகு, "யாதா யாதா ஹி தர்மஸ்யா ..." என்ற மகாபாரதத்தின் சமஸ்கிருத சுலோகத்தையும் உச்சரிக்கிரார்.


1:08 நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோ கிளிப்பை முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டாக்டர் எஸ்.ஒய். குரேஷி, ட்விட்டரில், பகிந்துள்ளார். "Beating the stereotypes" என்ற தலைப்பில் எஸ்.ஒய். குரேஷி இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.


வீடியோவைப் பாருங்கள்:



பகிரப்பட்டதிலிருந்து, வீடியோவை ஆயிரக்கணக்கானவர்கள் பார்த்து மகிந்துள்ளனர். அதுமட்டுமல்ல, தான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெறுக என்பதற்கு ஏற்ப ஆயிரக்கணக்கானவர்கள் அதை ரீட்வீட்டும் செய்துள்ளனர். 


இந்த காணொளி சமூக வலைதளங்களில் பரவலாக வரவேற்பை பெற்று வருகிறது. மகாபாரத தலைப்பு பாடலை கச்சிதமாக பாடியதற்காக மக்கள் அவரை பாராட்டுகின்றனர். பலர் 'இந்தியாவின் உண்மையான கலாசாரம்' இது என்றும், ஒருவரையொருவர் மதித்து, புரிந்துக் கொண்டு வாழும் இந்த கலாசாரம்  தான் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளனர், 


இந்த வீடியோவால் ஈர்க்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரம், இந்த வீடியோவை பாராட்டி பதிவிட்டுள்ளார். 'அற்புதமான மற்றும் ஊக்கமளிக்கும்' என்று குறிப்பிட்ட முன்னாள் மத்திய அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார். அதில், பாரதிய ஜனதா மற்றும் ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) ஆகியோர் இந்த வீடியோவை கேட்க வேண்டும் என பிரதமர் அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.   



"இது மிகவும் அழகாக இருக்கிறது. எங்கள் உண்மையான இந்தியா இதுதான், என்று ஒரு பயனர் எழுதினால், மற்றொருவர் கருத்து தெரிவிக்கையில்," இது நம் குழந்தை பருவத்திலிருந்தே பள்ளிகளில் நாம் அறிந்த மற்றும் கற்பித்த இந்தியா. வேற்றுமையில் ஒற்றுமை!!" என்று பதிவிட்டுள்ளார்.


மூன்றாவது பயனர், “அருமையான காட்சி! ராமாயணம் மற்றும் மகாபாரதம் மூலம் வாராந்திர பொழுதுபோக்குக்காக நாங்கள் காத்திருந்த அந்த ஏக்கம் @DDIndialive நாட்களை எனக்கு நினைவூட்டுகிறது! " என்று எழுதியுள்ளார்.



இந்திய தொலைக்காட்சியின் மிகவும் புகழ்பெற்ற புராண நாடகங்களில் ஒன்றான மகாபாரதம், 1988 மற்றும் 1990 க்கு இடையில் ஒளிபரப்பப்பட்டது மற்றும் 2020 இல் மீண்டும் ஒலிபரப்பப்பட்டது. முகப்புப் பாடலை மகேந்திர கபூர் பாடியிருந்தார்.


Also Read | காதலிக்காக காதலன் உருவாக்கிய 11 விதிமுறைகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR