இணையத்தில் வைரலாகும் பிறந்த குழந்தைக்கு தனது தந்தை தாய்பால் கொடுக்கும் புகைப்படம்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தங்களின் குழந்தையை பெற்றெடுக்க விஸ்கான்ஸின் ஜோடி ஒன்று மருத்துவமனைக்குச் செல்லும் போது தாய்க்கு மட்டும் அது மறக்க முடியாத இரவாக அமையவில்லை. அக்குழந்தையின் தந்தைக்கும் தான். 


ஏப்ரல் நியூபவுரின் பிரசவம் அவ்வளவு எளிதாக இல்லை. அவருக்கு முன்- சினைப்பருவ வலிப்பு நோய் மட்டுமின்றி உயர் ரத்த அழுத்தமும் இருந்தது. வலிப்பு காரணமாக ஏப்ரலை அவசரகால சிசேரியன் பிரிவுக்கு அழைத்துச் சென்றனர். ஜூன் 26-ல் ஏப்ரலுக்கு மகள் பிறந்தாள். அவளுக்கு ரோசாலி என்று பெயரிட்டனர். அப்போது திடீரென மீண்டும் வலிப்பு ஏற்பட ஏப்ரலை காப்பாற்றுவதற்காக சிகிச்சையின் பொருட்டு குழந்தையை தாயுடன் நெருங்கவிடவில்லை.


இதையடுத்து, 3.6 கிலோ எடையிருந்த அக்குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் தந்தையிடம் கொடுத்து விவரங்களை கூறியுள்ளார். இதை தொடர்ந்து, எனது குழந்தைக்கு என் மார்பை சிறிது நேரம் கொடுக்க சொன்னார் செவிலியர். 


பின்னர், செவிலியர் ஒரு பிளாஸ்டிக் முலைகாம்பு உறை ஒன்றை ஒரு குழாயுடன் இணைந்து ஊசி மற்றும் சில வழிமுறைகளைப் பயன்படுத்தி, அந்த பிளாஸ்டிக் முலைகாம்பு உறையை மேக்மில்லனின் மார்புகாம்போடு பொருத்தினார். அதன் மூலம் நான் என குழந்தைக்கு பால் ஊட்டினேன். 


''நான் இது வரை பால் தந்தது கிடையாது. ஒரு குழந்தைக்கு மார்பில் இருந்து பால் ஊட்டிய முதல் ஆண் நான் தான் என்று வியப்புடன் கூறினார். எனது குட்டி பெண் குழந்தையை நான் பார்த்தவுடன் எனக்கு ஒரு பந்தம் உருவானது. என்று தெரிவித்தார்.


இந்தச் செய்தியை அவர் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பறவை வருகிறது. மாக்ஸாமில்லியனின் இந்த 'தந்தைப் பால்' முயற்சிக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகியது. '' MOM என எழுதிய டாட்டூவுக்கு கீழ் சரியான விஷயம் நடந்துள்ளது'' என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.