`ஏய் இங்கே பார்...ஏய் அங்கே பார்`: புலிக்கு தண்ணி காட்டும் வாத்து, வேற லெவல் வைரல் வீடியோ
Rare Animal Video: வாத்து ஒன்று புலியை பாடாய் படுத்தும் வீடியோ வெளியாகி இணையவாசிகளை வியக்க வைத்துள்ளது.
வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
புலிகள், சிறுத்தைகள், சிங்கங்கள் ஆகியவை ஆபத்தான, அடாவடியாக வேட்டையாடும் மிருகங்களாக பார்க்கப்படுகின்றன. இவற்றை கண்டால் காட்டில் உள்ள மற்ற அனைத்து மிருகங்களும் அஞ்சி நடுங்குகின்றன. இவற்றின் வேட்டையாடும் திறனை காட்டும் பல வீடியோக்களை நாம் சமூக ஊடகங்களில் பார்த்துள்ளோம். பெரிய விலங்குகளே இவற்றிலிருந்து விலகி இருக்க விரும்புகின்றன. சிறிய விலங்குகளை பற்றி கேட்கவே வேண்டாம். அவை இந்த கொடூர விலங்குகள் இருக்கும் பக்க தலை வைத்துகூட படுப்பதில்லை.
ஆனால், இந்த பொதுவான கருத்தை பொய்ப்பிக்கும் வண்ணம் தற்போது வெளிவந்துள்ள ஒரு வீடியோ இருக்கிறது. இதை பார்த்தால் நம் கண்களையே நம்மால் நம்ப முடியாது. இந்த வீடியோ வைரல் ஆகி வருகின்றது. வாத்து ஒன்று புலியை பாடாய் படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகி இணையவாசிகளை வியக்க வைத்துள்ளது.
புலியை படுத்திய வாத்து
இந்த வீடியோவில் தண்ணீரில் ஒரு வாத்து மற்றும் ஒரு புலி இருப்பதை காண முடிகின்றது. புலி வாத்தை வேட்டையாட தண்ணீருக்குள் சென்றது. ஆனால் அந்த வாத்து புலியின் கண் எதிரே இருந்தாலும், அதனால், அந்த வாத்தை பிடிக்க முடியவில்லை. ஏனெனில் புலியின் பிடியில் சிக்காமல் புத்திசாலி வாத்து அதற்கு தண்ணி காட்டுகிறது. வாத்து இருக்கும் இடம் நோக்கி புலி செல்லும் முன் வாத்து கணப்பொழுதில் தண்ணீருக்குள் சென்று விடுகிறது. ஆனால், அது அப்படியே இருக்கவில்லை. மீண்டும் புலியின் கண்ணில் படும்படி அது மேலே வருகிறது. புலி மீண்டும் அதை பார்த்து அதை பிடிக்க மேலே வரும் முன் அது மீண்டும் தண்ணீருக்குள் செல்கிறது. இப்படி மீண்டும் மீண்டும் வாத்து செய்கிறது.
மேலும் படிக்க | Viral Video: காதலிக்காக உயிரை விட்ட பறவை.... கண்களில் கண்ணீரை வரவழைக்கும் வீடியோ!
புலிக்கு தண்ணி காட்டிய வாத்தின் வீடியோவை இங்கே காணலாம்:
தன்னை பிடிக்க வந்த புலியை வாத்து பாடாய் படுத்துகிறது. புலியை பார்த்தால், வாத்தை பிடிக்க செய்த முயற்சியில் அது சோர்ந்துவிட்டது போல தெரிகிறது. வாத்து ஆட்டம் காட்டி தப்பிக்கும் வகையில் அந்த இடம் பெரிய இடமாகவும் இல்லை. மிக சிறிய இடத்தில் உள்ள தண்ணீரில்தான் வாத்து புலியை படுத்தி எடுக்கிறது.
பொதுவாக புலியின் பிடியில் இருந்து இரை தப்புவதில்லை. ஆனால் இந்த வாத்து அந்த கூற்றை மாற்றிவிட்டது. தான் தப்பியது மட்டுமல்லாமல், புலியே வெறுத்து, சோர்ந்து போகும் அளவுக்கு அதற்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது இந்த வாத்து. புலி எவ்வளவு முயற்சி செய்தும் அந்த வாத்தை புலியால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் @Rainmaker1973 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். வாத்தின் புத்திசாலித்தனத்தை பாராட்டி வருகிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | மேடையில் கலக்கிய மணமகள்.. சொதப்பிய மணமகன்: ஒரே காமெடிதான் போங்க.. வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ