ஒரு நொடியில் ராஜா ராணி பட நஸ்ரியா போன்று காதலன் கண் முன் விபத்தில் உயிரிழந்த காதலி....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹைதராபத்தில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பு சுவரில், பைக் எதிர்பாராத விதமாக மோதிய விபத்தில், காதலருடன் பயணித்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 


இந்த விபத்தின் சிசிடிவி காட்சியை போலீசார் வெளியிட்டுள்ளனர். பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளாரக பணியாற்றி வந்த வினுசா, தனது காதலர் கிரண்குமாருடன், பைக்கில் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளார். 


அப்போது, அங்கு சாலையின் நடுவே வைக்கபபட்டு இருந்த இரும்பு தடுப்பில் மோதி, தூக்கி வீசப்பட்ட வினுசா மீது, பின்னால் வந்த கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேய பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமுற்ற காதலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.