தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர் த்ரிஷா. இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து சாமி ஸ்கொயர் படத்தில் நடிப்பதாக இருந்து பிறகு அதிலிருந்து விலகினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், நடிகை த்ரிஷா பாக்‌சிங் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஜிம்மில் ஒரு ஆணுடன் இணைந்து பாக்‌சிங் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார் த்ரிஷா. இந்த வீடியோவை தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் த்ரிஷா. 


தற்போது மலையாளத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நடித்த 'ஹே ஜூட்' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், தொடர்ந்து தனது உடலை எப்போதும் ஸ்லிம்மாக வைத்துக்கொள்வதில் அதிக அக்கறை காட்டி வருகிறார். 


இதற்காக எப்போதும் ஜிம்மில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் த்ரிஷா.