பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த விவகாரம் தொடர்பாக இந்தியப் பிரதமருக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. பிரதமர் மோடிக்கு ஆதரவாக இந்தியர்கள் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருவது வைரல் ஆகிறது. இந்தியப் பிரதமருக்கு எதிராக மோசமான கருத்துகளையும் இந்தியர்களுக்கு எதிராக இன வெறி கருத்துகளையும் மாலத்தீவு அமைச்சர்கள் கூறியதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த மாலத்தீவின் அமைச்சர்கள் மூன்று பேரை அந்நாட்டு அரசு தற்காலிகமாக பதவி நீக்கம் செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2, 3-ம் தேதிகளில் அரசுமுறை பயணமாக லட்சத் தீவு சென்றிருந்தார். அந்த பயணத்தின் புகைப்படங்கள், வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அதற்கு மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சனம் செய்திருந்தனர்.


இந்த நிலையில், இந்தியர்கள் பலரும் மாலத்தீவு செல்வதற்காக திட்டமிட்டிருந்த தங்களுடைய பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். 
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டி தீவு நாடான மாலத்தீவு தான் இந்தியர்கள் அதிகம் விரும்பி சுற்றுலா செல்லும் நாடுகளில் ஒன்று என்பதும், சுற்றுலாத் துறையை மட்டுமே நம்பியிருக்கும் மாலத்தீவுக்கு இந்திய சுற்றுலாப் பயணிகள் மிகவும் முக்கியமானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட் செய்தி: இந்த நாளில் வருகிறது டிஏ ஹைக் அறிவிப்பு


இதற்கிடையில், மாலத்தீவு சர்ச்சைக்கு மத்தியில், ஈஸி மை ட்ரிப் (EaseMyTrip) பயண நிறுவனம், மாலத்தீவுக்கான அனைத்து விமான முன்பதிவுகளையும் ரத்து செய்துள்ளது. மாலத்தீவு புறக்கணிப்பு (#BoycottMaldives) என்ற ஹேஷ்டேக் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. ஆயிரக்கணக்கான இந்தியர்கள்,ஹோட்டல் முன்பதிவு மற்றும் விமான டிக்கெட்டுகளை ரத்து செய்து வருகின்றனர்.  


இந்தியா மாலத்தீவு சர்ச்சை
#BoycottMaldives 
பிரதமர் நரேந்திர மோடி குறித்து மாலத்தீவு தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததையடுத்து ட்ரெண்டிங்கில் உள்ள இந்த #BoycottMaldives ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. 


மாலத்தீவு சுற்றுலாத்துறைக்கு பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், EaseMyTrip மாலத்தீவுக்கான அனைத்து விமான முன்பதிவுகளையும் நிறுத்தியுள்ளது. என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான நிஷாந்த் பிட்டி, எக்ஸ் சமூக தளத்தில் பதிவிட்டுள்ளார். 



நிஷாந்த் பிட்டி தனது பதிவில், 'EaseMyTrip அனைத்து மாலத்தீவு விமான முன்பதிவுகளையும் நிறுத்தி வைத்துள்ளது' என்று எழுதினார். அந்தப் பதிவில் பிரதமர் மோடியின் சமீபத்திய லட்சத்தீவு பயண புகைப்படம் உள்ளது.


அதில், Chalo Lakshadweep ஹேஷ்டேக் உள்ளது. அந்த பதிவில், 'லட்சத்தீவின் நீர் மற்றும் கடற்கரைகள் மாலத்தீவுகள்/சீஷெல்ஸ் போன்ற சமீபத்தில் பிரதமர் மோடி சென்ற பகுதிகளுக்கு ஈஸ் மை ட்ரிப்பில் தனித்துவமான சிறப்பு சலுகைகளை வழங்குவோம் என்றும் நிஷாந்த் பிட்டி அறிவித்துள்ளார்.


மேலும் படிக்க | Bone Health: குளிர்காலத்தில் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க இனிப்பான வழிகள்


மாலத்தீவின் நிலை என்ன?
மாலத்தீவு ஜனாதிபதியாக முகமது முய்ஸு அதிபராக பதவியேற்றதில் இருந்து இந்தியாவுடனான உறவை கெடுக்கும் செயல்களை செய்து வருகிறார் என்று விமர்சிக்கப்படுகிறது. அவர், சீனாவுக்கு மிக நெருக்கமானவர்களாகக் கருதப்படுகிறார். தற்போது மாலத்தீவுகளைப் புறக்கணிப்பு தொடர்பான சமூக ஊடக கொந்தளிப்பு மாலத்தீவு அரசாங்கத்திற்கு இக்கட்டை ஏற்படுத்தியிருக்கிறது. 


பிரதமரின் பயணம் காரணமாக கடந்த 2 நாட்களாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக லட்சத் தீவு தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்துவிட்டது என்பது, சுற்றுலாத் துறையை நம்பி வாழும் இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு அதிர்ச்சி அடைந்தது.


(பொறுப்புத்துறப்பு: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான அறிவை அடிப்படையாகக் கொண்டவை. கட்டுரை தகவலுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது.)


 


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ