#MeToo பாலியல் புகாரில் சிக்கிய மத்திய அமைச்சர் MJ.அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் மத்திய வெளியுறவு இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது 12-க்கும் மேற்பட்ட பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்திய அளவில் பெரும் சலசலப்பை கிளப்பி வரும் #MeToo ஹாஷ்டேக் மூலமே சமூக வலைதளங்களில் பெண்கள் அக்பருக்கு எதிராக புகார் தெரிவித்தனர். 


இதைத்தொடர்ந்து, எம்.ஜே.அக்பர் பதவிவிலக வேண்டும் அல்லது அவரை பிரதமர் மோடி பதவி நீக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். மறுபக்கம் இந்த புகார்களை விசாரிக்க வேண்டும் எனவும், இந்த புகார்கள் குறித்து எம்.ஜே.அக்பர் பதில் அளிக்க வேண்டும் எனவும் சக பெண் அமைச்சர்களான மேனகாகாந்தி, ஸ்மிரிதி இரானி ஆகியோர் அறிவுறுத்தி உள்ளனர்.


இந்நிலையில், #MeToo பாலியல் புகாரில் சிக்கிய மத்திய அமைச்சர் MJ.அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தன் மீதான குற்றசாட்டை தனிநபராக எதிர்கொள்ளவே பதவியை ராஜினாமா செய்ததாக எம்.ஜே.அக்பர் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டிற்கு சேவையாற்ற வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.  


பாலியல் புகாரில் சிக்கிய மத்திய அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது இதுவே முதல்முறையாகும்....!