வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வனவிலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இவற்றில் பல வீடியோக்கள் நம்மை முற்றிலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் அமைகின்றன. இப்படிப்பட்ட சம்பவங்களை யாரேனும் நமக்கு கூறினால், கண்டிப்பாக நாம் நம்ப மாட்டோம். ஆனால், வீடியோவில் நேரில் காட்சியை கண்டபிறகு நம்மால் நிச்சயமாக நம்பாமல் இருக்க முடியாது.


அப்படி ஒரு வீடியோ சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இது காணும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது. அதிர்ஷ்டம் என்ற ஒன்றை கேள்விப்பட்டு  இருக்கிறோம். ஆனால், இப்படி ஒரு அதிர்ஷ்டத்தை நாம் கண்டிப்பாக கண்டிருக்க மாட்டோம். ஒரு சேவலின் அதிர்ஷ்டத்தை காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. எனினும், இதை சிலர் சேவலின் அதிர்ஷ்டம் என்று கூறினாலும், சிலர் இதை சேவலின் புத்திசாலித்தனம் என பாராட்டி வருகிறார்கள். அதிர்ஷ்டமோ புத்திசாலித்தனமோ, இந்த சேவல் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேவலைப் பார்த்து அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து உள்ளனர். இந்த சேவல் மற்றும் முதலை கூட்டத்தின் வீடியோ மிக வேகமாக வைரலாகி வருகிறது.


முதலைகளை முட்டாள்களாக்கிய சேவல்


வைரலான இந்த வீடியோவில், முதலைகள் கூட்டத்தின் நடுவே ஒரு நபர் ஒரு உயிருள்ள சேவலை வீசுகிறார். முதலைகளுக்கு இரையாக, அவற்றின் உணவாக அந்த சேவலை அந்த நபர் முதலைகளிடம் வீசுகிறார். ஆனால், அதன் பின்னர் நடந்த விஷயத்தை பற்றி அவர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். அங்கு அவர் நினைத்ததற்கு தலைகீழாக அனைத்தும் நடக்கிறது. அந்த சேவல் மிகவும் புத்திசாலியாக அனைத்து முதலைகளையும் ஏமாற்றி அங்கிருந்து பறந்து செல்கிறது. அனைத்து முதலைகளும் சேவலை  பின்தொடர்ந்து வந்தாலும் எந்த முதலையாலும் அதை வேட்டையாட முடியாமல் போவதை வீடியோவில் தெளிவாக காண முடிகின்றது. அனைத்து முதலைகளையும் ஏமாற்றிவிட்டு சேவல் அங்கிருந்து சென்று விடுகிறது. 


மேலும் படிக்க | ஆபீஸ் டிராயரில் கூலாக ரெஸ்ட் எடுத்த பாம்பு: செம ஷாக்கில் ஊழியர் - வைரல் வீடியோ


புத்திசாலி சேவல் அச்சரியமாக உயிர் தப்பிய விதத்தை இந்த வீடியோவில் காணலாம்:



வீடியோ இணையத்தில் வைரல் ஆனது


இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் @StrangestMedia என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


இன்னும் உயிர் வாழ விதி இருக்கும்போது, இறப்பது எப்படி?


‘சேவல் மிகவும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளது’ என ஒரு பயனர் எழுதியுள்ளார். ‘சில வினாடி தாமதமும் அதன் உயிரை வாங்கி இருக்கும்.. அதிர்ஷ்டசாலி’ என மற்றொரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார். ‘இவை அனைத்து சிரிப்பு, காமெடி முதலைகள்.. இவற்றால் சிரிக்க வைக்கதான் முடியும்.. வேட்டையாட முடியாது’ என ஒரு பயனர் கிண்டலாக எழுதியுள்ளார்.


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | ’அந்தரத்தில் மரண சண்டை’ நண்பனுக்காக பாம்பை பதம் பார்த்த பல்லி: வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ