சூப்பர் ஸ்டார் ரஜனி நடிப்பில் உருவாகி வரும் பேட்ட திரைப்படத்தின் வெளிவராத புகைப்படங்களை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தல் நடிகர் ரஜினிகாந்த நடித்துவரும் திரைப்படம் "பேட்ட". இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் மூலம் முதன்முறையாக ரஜினியின் படத்துக்கு இசையமைத்துருக்கிறார் அனிருத். 


பேட்ட படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில் பொங்கலுக்கு திரைக்கு வர தயாராக உள்ளது. முன்னதாக பேட்ட திரைப்படத்தின் பாடல்கள் வெளியான நிலையில் இத்திரைப்படத்தின் வெளிவராத புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.



இத்திரைப்படம் பொங்களுக்கு வெளிவரும் என தெரிவித்தபோதிலும், இதுவரை அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படவில்லை. இப்படத்திற்கு தற்போது U/A சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் படத்தின் ப்ரமோசன் வேலைகள் மட்டும் நடைப்பெற்று வருகிறது. படத்தின் வெளியிட்டு தேதி உறுதி செய்யப்பட்ட பின்னரே வீடியோ ப்ரோமக்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது படத்தின் புகைப்படங்களை மட்டும் படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.


வரும் பொங்களுக்கு அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு நிலையில், வரும் பொங்களில் ரஜினி, அஜித் ரசிகர்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் எனவே கூறப்படுகிறது.