அதிகரித்த வெப்பம்! டிரான்ஸ்பார்மர்களில் தண்ணீர் ஊற்றும் அதிகாரிகள்! வைரல் வீடியோ!
Viral Video: உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் மின்துறை அதிகாரிகள் அதிக வெப்பத்தில் இருந்து டிரான்ஸ்பார்மர்களை பாதுகாக்க அதன் மீது தண்ணீர் ஊற்றி உள்ளனர்.
Viral Video: இந்த ஆண்டு கோடை காலத்தில் நாடு முழுக்க அனைத்து மாநிலங்களிலும் அதிக வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக சிலர் இறந்தும் உள்ளனர். வெயிலை சமாளிக்க முடியாமல் பலரும் திணறி வருகின்றனர். இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் உள்ள மொராதாபாத் மாவட்டத்தில் அதிக வெப்பத்தை குறைக்க டிரான்ஸ்பார்மர்களில் தண்ணீர் தெளிக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. மின் துறை அதிகாரிகள் அதன் மீதுள்ள வெப்பத்தை குறைக்க இவ்வாறு செய்துள்ளனர். உத்தரபிரதேசம் முழுவதும் அதிக வெப்பநிலை நிலவி வருவதால் டிரான்ஸ்பார்மர்கள் அதிக வெப்பமடைந்தால் எளிதில் பழுதாகிவிடும் என்பதற்காக இவ்வாறு மின்சாரத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.
மேலும் படிக்க | Viral Video: பாசக்கார பய போலிருக்கு.... புறாவுக்காக வாயை கொடுத்த ‘பாரி’ வள்ளல்...!!
"டிரான்ஸ்பார்மர்கள் நல்லவிதத்தில் செயல்படவும், நீண்ட நாட்கள் பழுதாகாமல் இருப்பதற்கும் அதன் வெப்பநிலை 60-70 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருக்க கூடாது. எனவே தான் அதன் வெப்பநிலையை 50 டிகிரிக்கு கம்மியாக குறைக்க தண்ணீர் ஊற்றி உள்ளனர். மின்சாரம் சீராக செல்வதை உறுதிப்படுத்த டிரான்ஸ்பார்மர்கள் அதிக ஹீட் ஆகாமல் இருப்பது அவசியம். அதற்காக தான் இந்த தனித்துவமான முறையை மின்சாரத் துறை கையாண்டுள்ளது" என்று மின்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். தென்னிந்திய பகுதிகளை விட வட மாநிலங்கள் அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ராஜஸ்தான், உத்திரபிரதேசம், ஹரியானா போன்ற பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் தாண்டியது. இது வழக்கமான வெப்பநிலையை விட பலமடங்கு அதிகம். மேலும் டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலையாக 49 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. டெல்லியில் உள்ள முங்கேஷ்பூர் மற்றும் நரேலாவில் 49.9 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து நஜாப்கர் பகுதிகளில் 49.8 டிகிரியில் வெப்பநிலை பதிவாகி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை அதிகரிப்பே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ