இளம்பெண் ஒருவரிடம் உத்திரபிரதேச இளைஞர்கள் பலவந்தமாக அத்துமீறி நடந்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஒருவாரமாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரால பகிரப்பட்டு வருகின்றது. இந்த வீடியோவில் 16-வயது இளம்பெண் ஒருவரை 6 இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று பலவந்தப்படுத்துகிறது.



காட்டுவழிப் பாதையில் தனியா நடந்துச் சென்ற இந்த பெண்னை துன்புறுத்தும் சம்பவம் கடந்த ஜூலை 12-ஆம் நாள் நிகழ்ந்துள்ளது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாக பகிரப்பட்டப் பின்னர் இந்த கும்பளினை காவல்துறையினர் கைது செய்ய துவங்கியுள்ளனர். இதுவரை இந்த குழுவில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் மூன்று பேரினை காலவ் துறையினர் தேடி வருகின்றனர்.



இதுகுறித்து காவல்துறை அதிகாரி குல்தீப் நாராயணன் தெரிவிக்கையில்... முக்கிய குற்றவாளி பிடிப்பட்டுள்ளார். மேலும் மூன்று பேரினை தேடிவருகின்றோம் என தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண் மைனர் என்பதால் அவரது பெயர் மற்றும் பிடிப்பட்டவர்களின் பெயரினை வெளியிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்!