Vaccine Hesitancy: இரட்டை வேடத்தில் விழிப்புணர்வு வீடியோவில் அசத்தும் வரலட்சுமி
நடிகை வரலட்சுமி சரத்குமார் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வீடியோவில் இரட்டை வேடத்தில் தோன்றி அசத்தியுள்ளார்
நடிகை வரலட்சுமி சரத்குமார், திரையுலகில் பிரபலமானவர். அவர் தனது நடிப்புத் தொழிலைத் தாண்டி பல்வேறு சமூக சேவைகளும் செய்து வருகிறார்.
தற்போது கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை வீடியோவில் தோன்றியுள்ளார் வரலட்சுமி. இந்த விழிப்புணர்வு வீடியோவில் இரட்டை வேடத்தில் தோன்றி அசத்தியுள்ளார்.
சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கும் இந்த வீடியோவில் இரட்டை வேடத்தில் நடிக்கும் வரலட்சுமி, 'தடுப்பூசி' என்பது ஒரு ஹெல்மெட் மாதிரி பாதுகாப்பு கவசம் என, உதாரணத்துடன் அழகாக எடுத்துச் சொல்கிறார்.
ஹெல்மெட் போட்டவர்களுக்கு விபத்துகள் ஏற்படலாம், ஆனால் விபத்து ஏற்பட்டாலும், உயிருக்கு ஆபத்து வராது. அதேபோல் தான் தடுப்பூசி போட்டு கொண்டாலும், கொரோனா பாதிப்பு வரலாம், ஆனால் கொரோனாவிற்கு பலியாக மாட்டார்கள் என்றும் கூறுகிறார்.
ஒரு வரலட்சுமி சொல்லும் அறிவுரையை கேட்கும் மறுமுனையில் இருக்கும் வரலட்சுமி, நாளைக்கே நான் தடுப்பூசி போட்டுக் கொள்கிறேன் என்று உறுதியளிப்பார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR